இந்நிலையில் சந்திரபாபு நாயுடு ஐதராபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-
கர்நாடக மந்திரி ஜனார்த்தன் ரெட்டி அவரது சகோதரர் சுதாகர் ரெட்டி ஆகியோர் ஆந்திராவில் ஏராளகமான இரும்பு கனிம சுரங்கங்கள் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் கோடி வருமானமாக கிடைத்தது. அதில் ரூ.5 ஆயிரம் கோடியை ரெட்டி சகோதரர்கள் ராஜசேகர ரெட்டிக்கு கொடுத்தனர்.
இந்த பணத்தை வைத்துதான் அவரது குடும்பத்தினர் டி.வி. சேனல், பத்திரிகை கள் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு பற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்.

ராஜசேகர ரெட்டியின் இந்த முறைகேடுகள் விரைவில் வெளிவரும். நாட்டில் நடைபெறும் முக்கிய ஊழல் புகார் வழக்குகளை தற்காலிகமாக வேண்டுமானால் மூடிமறைத்து விடலாம். எதிர்காலத்தில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும் போது அத்தனை ஊழல் வழக்குகளும் முறைப்படி நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும்.
இவ்வாறு சந்திரபாபுநாயுடு பேசினார்.
No comments:
Post a Comment