
ஆந்திராவில் ஆயுத கடத்தல் தொழில் கொடிக்கட்டிப்பறக்கிறது. இது தொடர்பாக கடந்த ஓராண்டில் ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கர ஆயுதங்கள், கைதுப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகவலை போலீஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆயுத தடுப்பு பிரிவு கமிஷனர் கமலாசன்ரெட்டி கூறியதாவது: ஐதராபாத் நகருக்கு ஆயுதங்கள் கடத்தி கொண்டு வந்து விற்கும் கும்பலை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். உத்திரபிரதேசம், பீகார் மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்டு இங்கு நக்சல்களுக்கு சப்ளை செய்யப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களில் பிஸ்டல் , ரிவால்வார் உள்பட 35 எண்ணிக்கை கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆயுத கடத்தலில் ஈடுபட்டதாக ஆயுத தடுப்பு பிரிவின் படி 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தி விற்கப்படும் ஆயுதங்கள் நக்சல்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. சில நக்சல்கள் கைது செய்யப்படும்போது இது தெரியவந்துள்ளது. சமீபத்தில் பேகம்பட்டில் லாட்ஜில் தங்கிஇருந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவும் பீகாரில் இருந்து கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment