இதையடுத்து டெல்லி மாநகராட்சி கமிஷனர் ஜே.எஸ்.மெக்ரா அதிரடி நடவடிக்கையில் இறங்கி னார். மாநகராட்சி ஊழியர் களின் வருகை பதிவேட்டில் Òபயோ மெட்ரிக்Ó நவீன தொழில் நுட்பத்தை கொண்டு வந்தார்.
இதன் மூலம் மாநகராட் சியின் ஒவ்வொரு பிரிவி லும் உண்மையான ஊழியர் கள் எத்தனை பேர் உள்ள னர் என்ற விவரம் தெரிய வந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங் கிய இந்த நவீன தொழில் நுட்ப வருகைப் பதிவேடு தற்போது மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கடைநிலை ஊழியர் கள் வரை அனைவருக்கும் விரிவு படுத்தப்பட்டு விட்டது.
இந்த நவீன தொழில் நுட்பம் காரணமாக டெல்லி மாநகராட்சியில் இதுவரை 22 ஆயிரத்து 853 போலி ஊழியர்கள் பெயர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எந்த வேலையும் பார்க்காமல் 22,853 பேரின் பெயரில் மாதந்தோறும் பணத்தை சிலர் வாங்கியுள்ளனர்.
இந்த மோசடி கண்டு பிடிக்கப்பட்டதும் 22,853 பேருக்கு போடப்பட்ட சம் பளம் நிறுத்தப்பட்டது. இதன் மூலம் டெல்லி மாநகராட் சிக்கு ஆண்டுக்கு ரூ.204 கோடி பணம் மிச்சமாகும் என்று மாநகராட்சி மேயர் டாக்டர் கன்வர் சயின் கூறி னார்.

No comments:
Post a Comment