Pages

Friday, November 27, 2009

ஹஜ் பயணிகள் 77 பேர் உயிரிழந்தனர்

உலகம் முழுவதும் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு சுமார் 3 லட்சம் முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரை சென்று உள்ளனர். கடைசி நாளான நேற்று மெக்காவில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள செங்கடல் பகுதியில் உள்ள ஜிட்டா நகரில் பலத்த மழை பெய்தது.

இதனால் ரோடுகளிலும், தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, பல வீடுகள் இடிந்து நாசமாயின. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மெக்கா செல்லும் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை வெள்ளத்தில் சிக்கி ஹஜ் பயணிகள் 77 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 21 பேரின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்.

மற்றவர்களின் உடல்களை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தகவலை ஜிட்டா சிவில் பாதுகாப்பு தலைவர் கேப்டன் அப்துல்லா அல்-அமீர் தெரிவித்துள்ளார்.

மெக்கா நெடுஞ்சாலை சேதமடைந்ததால் அதில் வாகனங்கள் செல்ல முடிய வில்லை. எனவே அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே வாகனங்களும், மக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment