பிரதமர் மன்மோகன்சிங் அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்ததால் இந்தியா, அமெரிக்கா உறவு மேம்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் சீனாவில் இருந்து வெளிவரும், கம்யூனிஸ்டு கட்சி பத்திரிகையில் இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது:-
ஒபாமா- பிரதமர் மன்மோகன்சிங் சந்திப்பால் இந்தியா, பாகிஸ்தான் இடையே உள்ள சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவலாம். ஆனால் அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையில் இந்தியாவை விட பாகிஸ்தான்தான் அமெரிக்காவுக்கு முக்கிய நாடாக இருக்கும்.
தெற்கு ஆசியாவில் தீவிர வாத ஒழிப்புக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே அமெரிக்காவுக்கு அதிக தேவையாக இருக்கின்றன.
அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து செயல்படுவதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள நீண்ட கால பிரச்சினைக்கு சற்று தளர்வு ஏற்படலாம்.
இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது.
Monday, November 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment