Pages

Friday, November 27, 2009

ஒவ்வொரு நாளும் 200 பெண்கள் புதிதாக விபசார தொழிலுக்கு வருகிறார்கள்


இந்தியாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் “பிரஜன்யா” என்ற சமூக அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 200 பெண்கள் புதிதாக விபசார தொழிலுக்கு வருகிறார்கள். அதில் 80 சதவீதம் பேர் விருப்பம் இல்லாமலே இந்த தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளப்படுகிறார்கள்.

இந்தியாவில் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து இருக்கின்றன. 1971-ம் ஆண்டை ஒப்பிடும்போது இப்போது 678 சதவீதம் கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து உள்ளன.

உலக அளவில் 3-ல் ஒரு பெண் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். பெண்களில் 85 சதவீதம் பேர் வாழ்நாளில் ஒரு தடவையாவது ஆண்களால் “செக்ஸ்” குற்றம் அல்லது மானபங்கம் போன்றவற்றிக்கு ஆளாகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. பாலியல் ரீதியாக 16 வகை குற்றங்கள் நடக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக இந்த அமைப்பு வருகிற 25-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை விழிப் புணர்வு பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

No comments:

Post a Comment