பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் ஒரு டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தற்போது பாகிஸ்தானில் இருந்து நாசவேலையில் ஈடுபட்டிருக்கும் தலிபான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ளும் புகுந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களை அழிக்க இந்தியா எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்.
மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பாகிஸ்தான் உண்மையுடன் நடந்து வருகிறது. மும்பை தாக்குதலில் தொடர்புடைய லஸ்கர் இ-தொய்பா தலைவர் ஜாகீர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 7 பேர் மீது ராவல் பிண்டி தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு ரகசியமாக திட்டமிட்ட லக்வி உள்பட 7 பேரையும் தெளிவான ஆதாரத்துடன் கைது செய் துள்ளோம். இருந்தும் இந் தியா மேலும் நடவடிக்கை எடுக்கும்படி எங்களை வலி யுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.
இந்த விஷயத்தில் இந்தி யாவுடன் வேறு நாடுகளும் உத்தரவிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment