Pages

Saturday, October 31, 2009

இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போகிறேன்


படங்கள் இல்லாத நிலையில் தடால் அடியாக " இனிமேல் கவர்ச்சியாக நடிக்க போகிறேன் என்று கூறி இருக்கிறாராம் பாவனா.அப்படியாவது வைப்பு கொட்டாத என்கிற ஆசை தான் !

விஜய்க்கு இன்னமும் நடிப்பு ஆசை விடவில்லை

ஞாபகங்களில் அடி வாங்கிய பாடலாசிரியர் விஜய்க்கு இன்னமும் நடிப்பு ஆசை விடவில்லை பாவம் .இப்போது அடுத்த படத்துக்கு தயாராகி இருக்கும் அவர் சொன்னது "நான் முதல்ல நடிக்கணும்னு முடிவு பண்ணினப்போ எழுதிய கதை பிரபா. இது ஆக்ஷன் கதை. அறிமுகமாகும் போதே ஆக்ஷனா பண்ணினா நல்லா இருக்காதுன்னு நண்பர்கள் சொன்னாங்க. அதனால, ஞாபகங்கள் கதையை எடுத்தேன். இந்தப் பட ரிலீசுக்குப் பிறகுதான், அறிமுகமாகும் போது யாருக்கும் எந்த இமேஜும் இல்லைன்னு புரிஞ்சது. அதனால அடுத்த படமான பிரபாவுல ஆக்ஷன் நாயகனாக நடிக்கிறேன். இது என்னை இன்னொரு இடத்துக்கு கொண்டு போகும்னு நம்புறேன். பிரபா எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமா இருக்கும். ஞாபகங்கள் வேற மாதிரியான கதை. அதுல சில விஷயங்களை சேர்க்க முடியாம போச்சு. ஆனா, இது கமர்சியலான கதை. தாகம் எடுத்தவன் தண்­ணீரைத் தேடுகிறான். தண்­ணீரும் தாகமெடுத்தவனையே தேடுகிறதுன்னு ஒரு வாசகம் இருக்கு. அதே போல நான் வெற்றியை தேடுறேன். வெற்றியும் என்னைதான் தேடுதுன்னு நம்பிக்கையோடு பயணம் தொடர்ந்துகிட்டிருக்கு" என்றார்.

விமானம் மூலம் ரேணி குண்டா வரும் ராஜபக்ஷே

இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இன்று திருமலை வருகிறார்.இலங்கையிலிருந்து தனி விமானம் மூலம் ரேணி குண்டா வரும் ராஜபக்ஷே, பகல் 1.30 மணிக்கு, திருமலை சென்று சாமி தரிசனம் செய்கிறார். பிறகு மாலை 4 மணிக்கு திருப்பதி திரும்பும் அவர், இலங்கை செல்கிறார்.இலங்கை அதிகாரிகள், சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத் திரியிடம் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். ரேணிகுண்டா விமான நிலையம், திருமலை யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முத்தக்காட்சி

நெல்லை சந்திப்பு படத்தில் புதுமையான முத்தக்காட்சியை வைத்திருக்கிறார் அதன் இயக்குனர் நவீன். நெல்லை சந்திப்பில் செந்தில் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். நாயகியாக வால்மீகி தேவிகா நடிக்கிறார். கதைப்படி நாயகன், நாயகிக்கு எப்படியாவது முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் தள்ளிப் போய்கிட்டே இருக்கு. ஒரு நாள் நாயகியை மயக்கி நாயகன் முத்தம் கொடுப்பார். இந்த காட்சியை ரொம்பவே வித்தியாசமான காட்சியமைப்புகளுடன் எடுத்திருக்கிறார்களாம்.

சொத்துகள் பறிமுதல்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பை, "தேடப்படும் குற்றவாளி"யாக அறிவிக்கும்படியும், இந்த வழக்கில் அவர் ஒத்துழைக்காவிட்டால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படியும் போலீசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப், கடந்த 2007ம் ஆண்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 60 நீதிபதிகளை வீட்டுச் சிறையில் அடைத்து அவசர நிலையை அறிவித்தார். இது தொடர்பாக அவர் அரசிலமைப்பு சட்டத்தை மீறி விட்டதாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தை பார்லிமென்டில் விவாதத்துக்கு வைத்து, முஷாரப் மீது தேச விரோத குற்றச்சாட்டை சுமத்தும்படி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வற்புறுத்தி வருகிறார்.



ஆனால், இதற்கு பிரதமர் கிலானி மறுப்பு தெரிவித்துள்ளார்.ஆளும் கட்சியினரின் நிர்பந்தம் காரணமாக பதவி விலகிய முஷாரப், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சொற்பொழிவாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல், பாகிஸ்தானின் பல்வேறு கோர்ட்டுகளில் அவருக்கு எதிரான தீர்ப்புகள் கூறப்பட்டு வருகின்றன. கடந்த 2007ம் ஆண்டு அவசர நிலையை பிறப்பித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி இஸ்லாமாபாத் கோர்ட், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.பலூசிஸ்தான் தலைவர் பக்டி கொல்லப்பட்ட வழக்கில், முஷாரப் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே முஷாரப் ஆட்சியில் இருந்த போது, வடமேற்கு எல்லை மாகாணத்தைச் சேர்ந்த அபோத்தாபாத்தில் பாதுகாப்பு படையினர், ஒருவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த நபர் இதுவரை வீடு திரும்பவில்லை. காணாமல் போனவரை ஒப்படைக்கும் படி கூறி அவரது குடும்பத்தார், அபோத்தாபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கில் முஷாரப் ஆஜராகாவிட்டால் அவரை, "தேடப்படும் குற்றவாளி'யாக அறிவிக்கும் படி உத்தரவிட்டார். இந்த வழக்கில் முஷாரப் ஒத்துழைக்காவிட்டால், அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும்படியும் உத்தர விட்டுள்ளார்.


காணாமல் போனவரது குடும்பத்தார், கடந்த மார்ச் மாதம் போலீசில் புகார் செய்த போது போலீசார், "முஷாரப் மீது நடவடிக்கை எடுக்க முடியாது' என தெரிவித்திருந்தனர். தற்போது கோர்ட் உத்தரவை போலீசார் பெற்றுக் கொண்டனர். "கோர்ட் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது" என மனுதாரரின் வக்கீல் முகமது இக்பால் தெரிவித்துள்ளார்.

புவனேச்வரி விபசாரம் ? பத்திரிகையாளர்களை தரகுறைவாக பேசிய

சிவகங்கை: பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சிவகங்கை கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நடிகை, நடிகர்கள் எட்டு பேர், வரும் 19ம் தேதி ஆஜராக மாஜிஸ்திரேட் ஜி.என்.சரவணக்குமார் உத்தரவிட்டார்.


சிவகங்கை பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் கார்த்திகேயன் மனைவி தமிழ்ச்செல்வி சார்பில் வக்கீல்கள் ஏ.குமரன், ஆர்.ராஜேஷ் கடந்த 27ம் தேதி தாக்கல் செய்த மனு:சென்னையில் விபசாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டார். போலீசாருக்கு அவர் அளித்த வாக்குமூலத்தில், "சில நடிகைகள் விபசாரத்தில் ஈடுபடுவதாக' தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட நடிகைகளின் பெயர்களை படங்களுடன், "தினமலர்' இதழ் வெளியிட்டது.


அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. போலீசார் கொடுத்த தகவலின்படி செய்தி வெளியானது.இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலர் ராதாரவி, சென்னை கமிஷனரிடம், "தினமலர்' இதழுக்கு எதிராக புகார் செய்தார். கமிஷனர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், "தினமலர்' செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். பிறகு அவர் ஜாமீனில் விடப்பட்டார்."தினமலர்' இதழை கண்டித்து, சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7ம் தேதி நடந்த கண்டனக் கூட்டம் குறித்த செய்தி, "டிவி' சேனல்களில் ஒளிபரப்பானது.


அந்த கூட்டத்தில் பல நடிகர்கள் பேசினர்.நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், சூர்யா, அருண் விஜய், சரத்குமார், சேரன், விவேக் ஆகியோர் பத்திரிகையாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மிக கேவலமாக பேசினர். இதை "டிவி'யில் பார்த்த போது வேதனையாக இருந்தது.உறவினர்கள், நண்பர்கள் என்னிடம் போனில் பேசி இதுகுறித்து விசாரித்தனர். எனக்கு அவமானமாக இருந்தது. மேலும் நிகழ்ச்சியை, "சிடி' ஆக தயாரித்து மற்றவர்கள் பார்க்க செய்துள்ளனர்.


நடிகர், நடிகைகளின் இந்த செயலால் எனது குடும்பத்தினருக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்பட்டது. அவர்கள் ஐ.பி.சி., 499 பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளனர்.எனவே, இம்மனுவை விசாரணைக்கு ஏற்று அவதூறு பேசிய நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரினார். இந்த மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட் நேற்றைக்கு (அக்., 30) ஒத்தி வைத்தார். நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், சத்யராஜ், சூர்யா, அருண்விஜய், சரத்குமார், சேரன், விவேக் ஆகியோர் வரும் 19ம் தேதி சிவகங்கை கோட்டில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.





5.7 மில்லியன் பேருக்கு அமெரிக்காவில் எச்1என்1 வைரஸ் காய்ச்சல்

வாஷிங்டன்
அமெரிக்காவில் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கிய முதல் நான்கு மாதங்களில் 5.7 மில்லியன் பேருக்கு அக்கிருமி தொற்றியிருக்கலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
அங்குள்ள ஆய்வுக் கூடங்கள் உறுதிப்படுத்திய எண்ணிக்கையை விட இது 100 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த நான்கு மாதங்களில் 1.8 மில்லியனுக்கும் 5.7 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் அக்கிருமியால் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இவர்களில் 21,000 பேர் வரை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாக ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கை கூறியது. அமெரிக்காவில் 300 பேர் இக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரத்துவ தகவல்கள் கூறின.

வங்கிக் கணக்குகளைத் திறந்து கடன்முதலைகளிடம் விற்ற15 பேர்

தங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளைத் திறந்து கடன்முதலைகளிடம் விற்ற15 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடன்முதலைகளின் பணவசூல் நடவடிக்கைகளுக்கு உதவ தங்களது பெயர்களின் வங்கிக் கணக்குகளைத் திறந்து தந்துள்ளனர்.
அத்துடன் ஏடிஎம் அட்டைகளையும் கொடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர். கடன்முதலைகளின் தொல்லையைத் தவிர்ப்பதற்காகவும் இதனைச் செய்துள்ளனர் என்றும் போலிஸ் அறிக்கை கூறியது.
பணத்துக்காக 15 பேரும் அப்படிச் செய்தது கொடுமையானது என்று சிறப்புக் குற்றவியல் புலனாய்வுத் துறையின் சூப்ரின்டன்டன் கோ லாம் கியோங் கூறினார்.
கடன்முதலைகளின் நடவடிக்கைகளில் உதவுபவர்களுக்கு கூடிய பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $200,000 அபராதமும் விதிக்கப்படலாம்.

Friday, October 30, 2009

உறவாடிக் கெடு

எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப்படமான "வேட்டைக்காரன்' என்கிற தலைப்பால் ஈர்க்கப்பட்டோ அல்லது கற்பனை வறட்சியால் பீடிக்கப்பட்டோ அதே தலைப்பிலேயே தற்போது இன்னொரு படம் தயாராகியுள்ளது.


வேடிக்கை என்னவென்றால், எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் தலைப்பில் உருவான "அன்பே வா', "நாடோடி மன்னன்', "ரகசிய போலீஸ் 115', "நம் நாடு', "நாளை நமதே' உள்ளிட்ட எந்தத் திரைப்படமுமே இதுவரை வெற்றி பெற்றதில்லை. பரத் நடிப்பில் "எங்க வீட்டு பிள்ளை' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட படமும் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்' படம் இரண்டு வருடங்களாகியும் இன்னும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.


இந்தப் புதிய "வேட்டைக்காரன்' படத்தை பாரம்பரியம் மிக்க ஏவி.எம். நிறுவனம் சார்பாக ஏவி.எம்.பாலசுப்ரமணியனும் பி.குருநாத்தும் தயாரிக்க, நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.


அவரோடு, தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா கை கோர்த்திருக்கிறார் கதாநாயகியாக! வியாபார ரீதியான இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.


ஆக, ஒரு கமர்ஷியல் திரைப்பட கூட்டணியின் பின்புலத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் "வேட்டைக்காரன்' வெற்றிக் கனவோடு பயணிக்கத் தொடங்கினான்.


கடந்த இரண்டு வருடங்களாக, அவ்வப்போது தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, மன்றத்துக்கென தனிக்கொடி, இயக்கம், இலச்சினை (ப்ர்ஞ்ர்) உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்யின் இந்தப் பயணத்தை அரசியலில் வெற்றிக் கூட்டணி அமைத்து வருபவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.


சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக எதிர்பாராத அறிவிப்பு வந்தது.


பொதுவாக, எந்த நிறுவனம் தயாரித்த படமாக இருந்தாலும் அதை தங்களது விளம்பர சக்தியைக் காட்டி மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே சன் பிக்சர்ஸின் வழக்கம் எனக் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெறாவிட்டாலும் கூட சன் டி.வி.யின் "டாப் டென்' பட வரிசையில் முதலிடம் பெற்றுவிடும்.


படத்தைத் தயாரித்து வியாபாரம் செய்ய முடியாமலோ அல்லது பணம் குறைந்தால் கூட பரவாயில்லை; நல்ல விளம்பரம் கிடைக்கும்; அதை வைத்து அடுத்த படத்தில் காலூன்றிவிடலாம் என நினைப்போர் தங்களது படங்களை "சன்' வசம் தருவதாகவும் பேச்சு உண்டு.


விளம்பரங்களில் ஏவி.எம்.மின் "வேட்டைக்காரன்', இளைய தளபதியின் "வேட்டைக்காரன்' என்றெல்லாம் பயன்படுத்த முடியாது; சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்' என்றுதான் வரும். அதனால் வேட்டைக்காரனாக இருந்துகொண்டு சன் பிக்சர்ஸ் கூண்டில் அடைபடுவதை விஜய் தரப்பும் தயாரிப்பு தரப்பும் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே அவர்களது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும், சன் பிக்சர்ஸ் வசம் படம் போய்விட்டால் தங்களுக்கு சென்னை ஏரியா விநியோக உரிமை கிடைக்காது என்பதும் விஜய் வட்டாரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் என்ன காரணத்தாலோ, வேறு வழியில்லாமல் வேட்டைக்காரனே வலையில் சிக்கிக்கொண்டான். படம் சன் பிக்சர்ஸ் வசம் மாறியது, விஜய் தரப்பே எதிர்பார்க்காத... குறிப்பாக, அறியாத ஒன்று எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இதற்கிடையில் சில நல விரும்பிகள் மூலம் தில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு வந்தார். உடனே காங்கிரஸில் சேரப் போகிறார்; இளைஞரணித் தலைவர் ஆகப்போகிறார் போன்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை திடீரென அழைத்து "எனக்கு எல்லாமே சினிமாதான்; "வேட்டைக்காரன்' படம்தான் என் தற்போதைய இலக்கு. இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்' என திடீரெனப் பின்வாங்கினார் நடிகர் விஜய்.


அவராகப் பின்வாங்கவில்லை; சில சக்திகளும் சூழ்நிலைகளும்தான் அவரை அப்படிப் பேசச் செய்தன என்று கூறியவர்களும் உண்டு.


விஜய்யும் அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தது போல, தில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் அவருக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தெரிகிறது. தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவி, தனது ரசிகர் மன்றத்தினருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் கட்சிப் பதவிகள் என்றெல்லாம் கனவுகள் கண்ட நடிகர் விஜய், காங்கிரஸ் மேலிடத்தின் "ஆகட்டும் பார்க்கலாம்' நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் தகர்ந்தன. அதிகபட்சம் நடிகர் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக்கப் படலாம் என்பதுதான் காங்கிரஸ் தரப்பில் வாக்குறுதியாக இருந்ததாம்.


அது ஒரு புறம் இருக்க, "இளைய தளபதி'யின் அரசியல் ஆசையும், காங்கிரஸில் இணைந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஆளும் திமுக தரப்பை எரிச்சலூட்டியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?


அதையடுத்து உருவான அரசியல் திட்டமே "உறவாடிக் கெடு' ப்ராஜெக்ட். அதன் முன்னோட்டம்தான் "வேட்டைக்காரன்' படம் கைப்பற்றப்பட்டதன் பின்னணி என்கிறார்கள்.


தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்' படம்தான் காரணம். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளாகிவிட்டனர். அதனால் தீபாவளிக்கு "ஆதவன்' அதன் பிறகு "வேட்டைக்காரன்' என முடிவு செய்யப்பட்டது.


விஜய்யின் முந்தைய பட வெளியீடுகளின்போது இருந்த அவருடைய தலையீடு முதல்முறையாகத் தகர்ந்தது. "வேட்டைக்காரன்' வெளிவராமல் தள்ளிப் போவதால், அடுத்த படத்தின் தயாரிப்பும், ரிலீசும் தள்ளிப் போகும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று "வேட்டைக்காரன்' தள்ளித் தள்ளிப் போகிறதே என்கிற கவலையில் "விஜய்' வட்டாரம் நிலைகுலைந்து போயிருக்கிறதே... சினிமாவைப் பொருத்தவரை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானுங்களே..!


- தினமணியில் தமிழ் மகன்

தமிழில் தொடர்ந்து நடிக்கும் ஆசை

ஹிந்திப் படங்களில் நடித்தவாறே தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார் தபு. "தமிழ் சினிமாவில் சில வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் தொடர்ந்து நடிக்கும் ஆசை இருக்கிறது. டைரக்டர் கதிரும் , ராஜீவ் மேனனும் மறக்க முடியாத ரோல்களை கொடுத்தார்கள் . சிறைச்சாலை படத்திலும் எனக்கு நல்ல ரோல்! ஆனால் இப்போது நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. ஹிந்தியில் நல்ல வாய்ப்புகள் வருவதால் அங்கு சென்றுவிட்டேன். இப்போது தெலுங்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன'' என்கிறார் தபு.

வெளி நாட்டு பத்திரிக்கையாளர்களை அழைக்கிறார் இலங்கை அமைச்சர்

இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட வெளிநாட்டு ஊடகங்களுக்கு இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

"இலங்கை முகாம்களின் நிலை குறித்து கண்டறிய வேறு நாட்டு ஊடகங்களை உங்கள் நாட்டு அரசு அனுமதிப்பது இல்லையே ஏன்?" என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

"ஏன் அனுமதிப்பதில்லை; அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தார்கள்'' என்றார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "நீங்களும் இலங்கை வந்து நிலைமையைப் பாருங்கள் " என்றார்.

ரஷிய நாட்டில் பயணம் மேற்கொண்ட மோடிக்கு பன்றி காய்ச்சல் ?

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ரஷிய நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த மோடி புதன்கிழமை குஜராத் திரும்பினார். அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது. இதைத்தொடர்ந்து மோடியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர்.

மோடியின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனை முடிவுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அடுத்த 7 நாள்களுக்கு தனிப்பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படும் என்று மருத்துவர்கள் குழு மேலும் தெரிவித்தது.

தூக்கத்தை கெடுத்து கொண்டிருக்கும்

ஆங்கிலத்தில் எனக்கு பிடித்த எழுத்தாளார் ஜெபிரே ஆர்செர் . பட பிடிப்பு இடைவேளையில் அவர் நாவல்களைத்தான் படிப்பேன் என்கிறாராம் பலரின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருக்கும் காதரினா கைப் .

ஒரு கோடி சம்பளம் ?

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான ஐஸ்வர்யா பச்சன் - அபிஷேக் பச்சன் ஜோடி இப்போது விளம்பர பட உலகிலும் புகுந்து கலக்கப்போகிறார்கள் . பிரபலமான ஒரு சோப் நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடிக்‌க ஒப்பந்தமாகியிருக்கிறார்களாம். சோப் விளம்பரம் என்றால் கிளுகிளுப்பு இல்லாமலா? குளியல் காட்சியுடன் எடுக்கப்படுகிறதாம் விளம்பரம். கணவன் - மனைவி இருவரும் தோன்றி நடிக்கும் இந்த விளம்பர படத்துக்காக ஒரு கோடி சம்பளமாக பெற்றுள்ளார்களாம்.

லிப்ஸ் டு லிப்ஸ் வாழ்க பாரதம்

மும்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் புதிய படம் தும் மிலி. இப்படத்தின் நாயகராக இம்ரான் ஹஸ்மியும், நாயகியாக சோஹா அலிகானும் நடித்து வருகிறார்கள். குணால் தேஷ்முக் இயக்குகிறார். பாடல் காட்சியொன்றில் சோஹா அலிகானும், இம்ரானும் லிப் லாக் கிஸ் அடித்திருக்கிறார்களாம். இதுபற்றி சோஹா அளித்துள்ள பேட்டியில், "முதலில் முத்தக் காட்சியில் நடிக்க தயங்கினேன். பின்னர் அந்த காட்சியின் அவசியத்தை புரிந்து கொண்டு நடித்திருக்கிறேன். இந்த முத்தக்காட்சியில் நடித்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது. அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஆபாசம் இல்லாமல் இருக்கும்"என்றாராம்!

குத்தாட்டம் ப்ரீதி ஜிந்தா

முன்னணி நடிகைகள் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதும், அதற்காக பெரும்தொகையை சம்பளமாக பெறுவதும் வாடிக்கை . அந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் பாலிவுட்டின் கன்னக் குழியழகி ப்ரீத்தி ஜிந்தா. இவர் அப்படி நடனம் ஆடியிருக்கும் படம் சல்மான்கானின் சொந்த தயாரிப்பான மேன் அவுட் மிஸஸ் கான். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பிரேம் சோனி. இதுபற்றி ப்ரீத்தி கூறுகையில், அப்படத்தில் எனக்கு ஒரு பாடலும் சில காட்சிகளும் உள்ள சிறிய கதாபாத்திரம். இதில் என் நண்பர் பிரேம் சோனிக்காகத்தான் நடிக்க ஒப்புக்கொண்டேன்'' என்றார். நண்பருக்காக நடிக்க ஒப்புக்கொண்டாலும் ரூபாய் அரை கோடி சம்பளமாகப் பெற்றிருக்கிறாராம் ப்ரீத்தி!

அமீர்கான் எய்ட்ஸ்

பாலிவுட்டின் முன்னணி நாயகன் அமீர்கான் எய்ட்ஸ் விழிப்புணர்வு பட‌மொன்றில் நடித்து வருகிறார். காஞ்சிவரம் படத்தின் வெற்றி தேசிய விருதை பெற்றுத்தந்த மகிழ்ச்சியில் இருக்கும் டைரக்டர் ப்ரியதர்ஷன், அடுத்தும் அவார்டை குறி வைத்தே படம் எடுக்க திட்டமிட்டு வருகிறார். அவர் எடுத்து வரும் எய்ட்ஸ் நோய் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய விழிப்புணர்வு படத்தில்தான் நாயகனாக அமீர்கான் நடிக்கிறார். இதில் அவர் எய்ட்ஸ் நோயாளியாக நடிக்கிறார் .

போதை மருந்து

டென்னிஸ் விளையாட்டு வீரர் அகாசி தான் விளையாட்டின் பொது போதை மருந்து உட்கொண்டதை ஒப்பு கொண்டிருக்கிறார் . இது நிருபிக்க பட்டால் அவரக்கு சிறை தண்டனை கிடைக்க வைப்பு உள்ளதாம் .

இரண்டாவதும் ஆண் குழந்தை

பிதாமகன், உள்ளம் கேட்குமே, தில் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை லைலா. தனது கன்னக்குழி அழகால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட லைலா, திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட்டார். தனது தொழிலதிபர் கணவர் மெஹ்தியுடன் மும்பையில் செட்டிலான லைலாவுக்கு கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்போது லைலா இன்னொரு குழந்தைக்கு அம்மாவாகியிருக்கிறார். லைலா - மெஹ்தி தம்பதியருக்கு பிறந்திருக்கிறது.

மீன் மாதிரி பாயும் நயனதாரா

என்னக்கு பிடித்து நான் வெஜ் தான். குறிப்பாக மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்.

அதுதான் அம்மணி மீன் மாத்ரி பாய்கிறாரோ ?

- நக்கல் நாகராசன்

விளம்பர தூ‌தராக நடிகை ரம்பா

கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச நிறுவனம் ஒன்றின் விளம்பர தூ‌தராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டிருக்கிறார். வீட்டு உபயோக ‌பொருட்கள் உற்பத்தியில் கனடாவில் முன்னணியில் இருக்கும் நிறுவனமான மேஜிக் உட் நிறுவனம் உலகம் முழுவதும் கிளைகளை பரப்பி தங்களது பொருட்களை சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை 2 ஆண்டுகளுக்கு ரம்பா அந்நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பாராம் .

அம்மணி உங்க பிரதர் பரிசளித்த ஒரு கோடி ரூபாய் காருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே ?

- நக்கல் நாகராசன்

8,087 தம்பதிகள்

திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, "கல்யாணமஸ்து' இலவச திருமணத் திட்டத்தில், நேற்று முன்தினம், ஆந்திராவில் 8,087 தம்பதிகள், திருமணம் செய்து கொண்டனர். ஆந்திராவில், 19 மாவட்டங்களில், நேற்று முன்தினம், "கல்யாணமஸ்து' திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.


ஐதராபாத்தில் உள்ள லலித கலா தோரணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மாநில கவர்னர் என்.டி.திவாரி, முதல்வர் ரோசய்யா, தேவஸ்தான போர்டின் தலைவர் ஆதிகேசவலு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திருமணத்தில் பங்கேற்ற 209 தம்பதிகளில், லண்டன் நகரைச் சேர்ந்த அரியட்டு, ஐதாராபத்தைச் சேர்ந்த கிராந்தி சைதன்யா தம்பதியினரும் குறிப்பிடத்தக்கவர்கள். முதல்வர் ரோசய்யா பேசுகையில், "திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தி வரும், இலவச கல்யாணமஸ்து திருமண திட்டத்தில், இதுவரை ஐந்து தவணைகளில், மாநில அளவில் 34,520 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.


பத்ராசலம் கோவிலில், 878 தம்பதிகள் திருமணம் செய்துள்ளனர். புதுமண தம்பதிகள் நலமுடன் வாழ ஆசீர்வதிக்கிறேன்' என்றார். மாநில கவர்னர் திவாரி பேசுகையில், "ஒரே சுப முகூர்த்த நேரத்தில், ஆயிரக்கணக்கான தம்பதிகள், திருமணம் செய்து கொள்வது சுபநிகழ்ச்சி. பணம் செலவில்லாமல், வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யும் இத்திட்டம், இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது' என்றார். சத்யசாய் நிகமாகம் வளாகத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில், கண்பார்வையற்ற இருவரும், சித்தூர் மாவட்டத்தில், 14 மையங்களில், 274 தம்பதியரும் திருமணம் செய்து கொண்டனர். திருப்பதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

புது வீட்டில் அழகிரி

மத்திய அமைச்சராகி ஐந்து மாதங்களுக்கு பிறகு, தனக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்ல புது வீட்டில், அழகிரி குடியேறினார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, தமிழகத்தில் இருந்து அழகிரியும் அமைச்சரானார். முதன் முறையாக அமைச்சரானதால் , அவருக்கு வீடு ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்காக, டில்லி சப்தர்ஜங் சாலையில், ஏற்கனவே சுப்புலட்சுமி ஜெகதீசன் வசித்து வந்த வீட்டில், தற்காலிகமாக தங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, அங்கு தங்கினார். அவருக்கென அதிகாரப்பூர்வ இல்லமாக, காமராஜர் சாலையில் உள்ள வீடு, ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரயில்வேயின் மங்களூர்- ஷாரனூர் இடையே,

கோழிக்கோடு: பயணிகளின் போதுமான வரவேற்பு இல்லாததால், லாபமற்ற நிலையில் இயங்கிவரும் 14 ரயில் நிலையங்களில், எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்துவதை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் மங்களூர்- ஷாரனூர் இடையே, எக்ஸ்பிரஸ் ரயில்கள், தற்போது நிறுத்தப்பட்டு வரும் 14 ரயில் நிலையங்களும், லாபத்தில் இயங்கவில்லை.


சில நாட்களில், இந்த ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நீண்ட தூர எக்ஸ் பிரஸ் ரயில்களில், ஒரு பயணி கூட ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயில் களை, இந்த நிலையங்களில் நிறுத்துவதை ரத்து செய்வது குறித்து, ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்டத்தில் மங்களூர் ஷாரனூர் இடையே ராஜதானி உட்பட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பாதை கொங்கன் ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

ரகசியங்களை பத்து கோடி ரூபாய்க்கு

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி துறை ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக நாசா
{Nazette} என்கிற விஞ்ஞானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் பணியாற்றியவர் விஞ்ஞானி ஸ்டீவர்ட் நொசெட்டே. அமெரிக்க வெள்ளை மாளிகை, எரிசக்தி துறை உள்ளிட்டவற்றிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவர், கடந்த வாரம் அமெரிக்க உளவுத் துறையால் ஹோட்டல் அறை ஒன்றில் பொறி வைத்து பத்தாயிரம் டாலர் கொடுத்து பிடித்தனர். விசாரணையில் இவர், இஸ்ரேலுக்கு அமெரிக்க விண்வெளித் துறை ரகசியங்களை பத்து கோடி ரூபாய்க்கு விற்க முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, அமெரிக்காவின் முக்கிய ரகசியங்களை விற்க முயற்சித்ததாக அவர் மீது அமெரிக்க உளவுத் துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.இவர் சந்திரயனில் பணியாற்றியவர் என்பது குறிப்பட்ட தக்கது .

Thursday, October 29, 2009

நன்றாக டாட்டூ

கீதா ஸ்வப்னா , திருச்சி .
நயன்தாரா நல்ல நடிகையா ?
நல்ல நடிகையா என்பதெல்லாம் தெரியாது .நல்ல இடத்தில் டாட்டூ போட்டு கொள்கிறார் ..

உத்தமனின் புத்திரர்தான்

மீரா , ஸ்காட்லாந்து .
நடிகர் சூர்யா தான் பேசவே இல்லை பத்திரிகைகள் திரித்து வெளியிடுகின்றனர் என்று கூறியுள்ளாரே ?

தினமலர் செய்தியை பாருங்கள் . இவர் உத்தமனின் புத்திரர்தான் . பேசியது உண்மை தான் .

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தான் பேசிய கருத்துக்கள் திரித்துக்கூறப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அவர் அளித்துள்ள விளக்க கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிற ஒரு மேடையில் என் கருத்துக்களை நான் பகிர்ந்து கொண்டேன். ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்ட போது நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்களை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மீடியாவைச் சேர்ந்த நண்பர்கள் தான் ஆதாரமான செய்திகளை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.




என்னுடைய பேச்சில், அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய, சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிற, எல்லோருக்கும் ஆசிரியராக இருக்கிற அருமையான தொழில் என்றே பத்திரிக்கைகளைப் பற்றி நான் சொன்னேன். அவதூறு செய்திகளைப் பற்றி நான் பேசிய கருத்துக்கள், ஒட்டுமொத்த மீடியாவைப் பற்றி நான் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. என் மீது அக்கறையுள்ள பத்திரிக்கை நண்பர்களும் என்னிடம் இதுகுறித்து பேசினார்கள். நான் பேசிய கருத்துக்கள் ஒட்டுமொத்த பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் சொன்னதாக திரித்துக் கூறப்படுகிறது.




நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை உலகத்தோடு என் குடும்பம் நல்லுறவு பேணி வந்திருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. உண்மைக்கு மாறான அத்தகைய திரிபுகளை உங்கள் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வரவே இந்த விளக்கம். பத்திரிக்கை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கு இருந்து வரும் ஆரோக்கியமான நல்லுறவை நான் பெரிதும் மதிக்கிறேன். என் கருத்துக்கள் தவறாக திரிக்கப்படுவதைக் கவனத்துக்குக் கொண்டு வந்த என் பத்திரிக்கை நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




ஆதாரம் உள்ளது: நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்து நடிகர் சூர்யா பேசியதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் பத்திரிக‌ை அலுவலஙகளில் உள்ளன.




சூர்யா பேசியதென்ன?: (கண்டன கூட்டத்தில் நடிகர் சூர்யா பேசியதை அப்படியே வாசகர்கள் பார்வைக்கு தருகிறோம்.) சூர்யா பேசியதாவது: பத்திரிகை என்பது காலையில் எழுந்தால் சமுதாயம் எப்படி இருக்கணும், எதை நோ்க்கி போகணும், என்ன கவனம் செலுத்தனும்ங்கிற விஷயங்களை சொல்லணும். பத்திரிகைகள் ஒரு வழிகாட்டியா இருக்கணும். ஆசிரியர் பணியை ஆற்றணும். நிறைய பத்திரிகைகள் நான் கேட்காமலேயே எங்க வீட்டுக்கு நிறைய பத்திரி‌கைகள் வருது. அதையெல்லாம் நானே எத்தனையோ த‌டவை கிழிச்சி குப்பை தொட்டியில போட்டிருக்கிறேன். ஏன்னா அத சின்ன வயசுக்காரங்க பார்க்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான். ரொம்ப அருமையான தொழில். நிறைய த‌டவை இதுபோல நடந்திருக்கு. நானே பாதிக்கப்பட்டிருக்கேன். என் குடும்பத்தில் இருக்கிறவங்களும் பாதிக்கப்பட்டிருக்காங்க. சாப்பாடுக்கு காசு இல்லாம வயித்தை கழுவுறாங்கன்னு அவங்க இப்படியெல்லாம் தொடர் எழுதுறத வச்சு தெரிஞ்சுக்கலாம். இதுக்கு சட்ட நடவடிக்கை ரொம்ப முக்கியம். அதுக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன்.




கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதிட்டு இருப்பாங்க. அவங்க பின்னாடி ஓடிட்டு இருக்கிறது நம்ம தொழில் கிடையாது. அத வன்மையா கண்டிக்கணும். நமக்கு என்னென்ன உரிமை இருக்கோ.. என்னென்ன சக்தி இருக்கோ... அத எல்லாத்தையுமே பயன்படுத்தி இவங்களை நசுக்கணும். திரும்ப இது மாதிரி ஒருத்தங்க யோசிக்கவே கூடாது. அந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கணும். முதல்வருக்கு ரொம்ப நன்றி. நாங்க எல்‌லோருமே ரொம்ப சந்‌தோஷமா இருக்கோம். எதிர்காலத்துல இப்படியொரு கூட்டம் இந்தவொரு காரணத்துக்காக கூடவே கூடாது. சேர்ல இருக்கும்போது சேருக்கு அடியில போய் போட்டோ எடுக்கிறது... இதெல்லாம் ரொம்ப கேவலம். தயவு செய்து இதையெல்லாம் பண்ணாதீங்க, என்றார்.



இதனை வருடம் அப்பா சேர்த்து வைத்திருந்த பெயரினை போட்டு உடைத்து விட்டார் சூர்யா .

- நக்கல் நாகராசன்

ஆயுட்கால சாதனை விருது

நவீன சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்படும் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ அமெரிக்காவில் மிகவும் சிறப்பான முறையில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்.
இப்போது பத்து நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் எனப்படும் தென் கிழக்கு ஆசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிறப்பான உறவுக்குப் பாடுபட்டதற்காகத் திரு லீக்கு ஆயுட்கால சாதனை விருது வழங்கப்பட்டது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று புதன்கிழமை காலையில் நடந்த அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசியல், தொழில்துறை தலைவர்கள் திரளாக வருகை தந்திருந்தனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ் ஆகிய மூன்று அதிபர்களும் கடிதங்கள் மூலமாகவும் ஒலிப் பதிவுச் செய்தி மூலமாகவும் திரு லீயை வாழ்த்திப் பாராட்டினர்.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் டாக்டர் ஹென்றி கிஸிஞ்சர், டாக்டர் ஜார்ஜ் ஷூல்ட்ஸ் ஆகிய மூத்த தலைவர்கள் நேரடியாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து மதியுரை அமைச்சரை கௌரவித்தனர்.
அமெரிக்கா-ஆசியான் தொழில்துறை மன்றம் என்ற அமைப்பு தன்னுடைய 25வது ஆண்டு நிறைவையொட்டி ஆயுட்கால சாதனை விருதுக்கு ஏற்பாடு செய்தது.

அந்த விருதைப் பெற்ற முதல் தலைவர் திரு லீ என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டரின் ஓரியண்டல் ஓட்டலில் நடந்த அந்த விருது வழங்கும் விழாவில் சுமார் 450 பேர் மாலை நேர உடையில் எடுப்பாகவும் கலகலப்பாகவும் கலந்து கெண்டது குறிப்பிடத் தக்கதாக இருந்தது. மதியுரை அமைச்சர் அமெரிக்காவுக்கு 11 நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு கார்

நடிகை ரம்பாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது. இந்த ஆடம்பரமான காரை பரிசாக வழங்கி ரம்பாவை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பவர் யார் தெரியுமா? அவர் வேறு யாருமல்ல. ரம்பாவின் சொந்த அண்ணன் வாசுதான். ஏராளமான படங்களை தயாரித்திருக்கும் வாசுவுக்கு, நீண்ட நாட்களாக ரம்பாவுக்கு விலையுயர்ந்த காரை பரிசளிக்க வேண்டும் என்ற ஆசை வாசுவிற்கு இருந்ததாம். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் இப்போது காரை பரிசளித்திருப்பதாக கூறுகிறார் வாசு.

அண்ணன் பரிசா கொடுத்தாரா ? இந்த ஒரு கோடி காருக்கு பரிசு வரி உண்டா ?

- நக்கல் நாகராசன்

சினிமாவிற்கு கதை எழுதும் மாதவன்

தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாத‌வனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக்க மும்பை சென்று மாதவனை சந்திக்க இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

டெண்டர் பெட்டியை உடைத்த அ.தி.மு.க.,

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில், டெண்டர் பெட்டியை உடைத்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சப்-கோர்ட் தீர்ப்பளித்தது. பெரியகுளம் நகராட்சியில் 2007 செப்., 25 ல், ஆடு அடிக்கும் தொட்டி மற்றும் நவீன முறையில் குப்பைகள் சேகரித்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கான வேலைபெற, டெண்டர் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு டெண்டர் பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜாமுகமது, பெருமாள், சந்தானம், பன்னீர்செல்வம் ஆகியோர் தகராறு செய்து டெண்டர்பெட்டியை உடைத்ததாக, நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ராமநாதன் தென்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் கவுன்சிலர்களை கைது செய்தனர். பெரியகுளம் சப்-கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி மோகன், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டணையும், தலா ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

ரயில் கடத்தல்

ஒரிசாவில் இருந்து டில்லிக்கு சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை, நேற்று முன்தினம் மேற்கு வங்கம் மிட்னாபூர் மாவட்டத்தில், நக்சலைட்களின் ஆதரவு பெற்ற, "போலீஸ் அத்துமீறலுக்கு எதிரான மக்கள் குழு' என்ற பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறை பிடித்தனர்; 1,200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிறை பிடிக்கப்பட்ட அந்த ரயிலை, போலீசார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சண்டையிட்டு மீட்டனர். ஆனால், நக்சலைட்கள் தான் ரயிலை சிறை பிடித்தனர் என, மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. இது போன்ற ரயில் கடத்தல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் தொடரும். நக்சலைட்களும், அவர்களின் ஆதரவு பெற்ற பழங்குடியினரும் அதை நிறைவேற்றலாம் என, மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், நக்சலைட்களின் ஆயுதப் புரட்சியும் தொடரும் என்றும் கூறியுள்ளது.

வன்முறை பரவி வருவதற்கு தமிழ்ப் படங்களே காரணம்

இந்திய சமூகத்திடம் வன்முறை பரவி வருவதற்கு தமிழ்ப் படங்களே காரணம் என்று மலேசியாவின் இஸ்லாமிய பாஸ் கட்சி கூறுகிறது.
இதுபற்றிப் பேசிய பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் தன்தாவி இத்தகைய படங்கள் திரையிடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
இந்திய இளையர்களிடையே காணப் படும் வன்முறை நீண்டகாலமாக
வன்முறைச் சம்பவங்களைக் கொண்ட படங்களை தொலைக்காட்சிகளில் காட்டிய தன் விளைவு என்று அவர் கூறியதாக தி நியூபேப்பர் செய்தி தெரிவித்தது.
“இந்திய இளையர்கள் பிரச்சினை களைத் தீர்க்கப் பயன்படுத்தும் ஆயுதங் களைக் கவனித்தாலே அவை தமிழ்ப் படங்களில் வருவதைப் போலவே இருப்பதை உணரலாம். இந்திய இளையர்கள் நமது சகோதரர்கள் போன்றவர்கள், அவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொல்வதை நாம் அனுமதிக்கக்கூடாது,” என்றார் அவர்.







-தகவல் உதவி துருவன் மாரியப்பா , மலேசியா

Wednesday, October 28, 2009

பனையளவு கொள்ளை

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை: ஏழைகளுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தேவை தான். ஆனால், அந்தத் திட்டத்தில் சமூக விரோதிகள் கொள்ளையடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தால் ஏழைகளுக்கு தினையளவு நன்மை என் றால், அதைச் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு பனையளவு கொள்ளையடிக்க வழி செய்துள்ளது?

காப்பீடு திட்டத்தில் எப்படி கொள்ளை அடிக்க முடியும் ? தி மு க எது செஞ்சாலும் குற்றம் சொல்வதே உங்க வேலையா போச்சு ?

- நக்கல் நாகராசன்

கேரள பஞ்சாங்க அடிப்படையில்

சபரிமலையில் வழக்கமாக கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல காலம் ஆரம்பமாகும். அன்று முதல் 41 நாட்கள் நடக்கும் பூஜை ஒரு மண்டலகாலம் எனப்படும். 41வது நாள் மண்டலபூஜை நடக்கும். கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்தால் 41 நாட்கள் விரதம் சரியாக வரும். ஆனால், இந்த ஆண்டு தமிழக பஞ்சாங்கங்களில் நவம்பர் 17ம் தேதியும், கேரள பஞ்சாங்கங்களில் நவம்பர் 16ம் தேதியும் கார்த்திகை பிறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதால் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம் .



கேரள பஞ்சாங்க அடிப்படையில்தான் , மண்டல காலபூஜைக்காக சபரிமலை நடை 15ம் தேதி மாலையே திறக்கப்பட்டு, 16ம் தேதி முதல் மண்டலகால பூஜை ஆரம்பமாகும் .தமிழக பஞ்சாங்கப்படி விரதமிருந்தால், 40 நாட்கள் தான் விரதமிருக்க முடியும். குறிப்பாக, முதன் முதலாக மாலையணியும் பக்தர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கும். எனவே, மண்டல பூஜையில் முறைப்படி விரதமிருந்து கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், நவம்பர் 16ம் தேதியே மாலை அணிந்தாக வேண்டும்.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறும்போது, ""இதுபோல ஒரு நாள் வித்தியாசம் கேரள, தமிழக பஞ்சாங்கங்களில் ஏற்படுவது வழக்கமானதுதான். மண்டல கால விரதம் என்பது 41 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். நவ.,16ம் தேதி கேரளாவில் கார்த்திகை ஒன்று. சபரிமலை மண்டல காலத்தை கணக்கில் கொள்பவர்கள் 16ம் தேதி மாலை அணிந்து கொள்ள வேண்டும். எனினும், தமிழக கோவில்கள் ஆசாரப்படி மண்டலகால விரதத்துக்காக 17ம் தேதி மாலை அணிவதிலும் தவறில்லை. அதுபோல சபரிமலை உட்பட கேரளாவின் அனைத்து கோவில்களிலும் மண்டல பூஜை வழக்கமான டிசம்பர் 27ம் தேதிக்குப் பதிலாக, 26ம் தேதியே நடந்து விடும். 27ல் நடை அடைக்கப்பட்டு விடும். ஒருநாள் விடுபடுகிறது என்பதற்காக பக்தர்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை. தங்கள் விருப்பப்படி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்,'' என்றார்.

கவர்ச்சியாக நடிக்க

தமிழில் "இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்', "ஓடிப்போலாமா', "நூற்றுக்கு நூறு' படங்களில் நடித்து வருகிறார் சந்தியா.

"இந்தியில் சான்ஸ் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். பாலிவுட்டுக்குப் போக யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் எந்த மொழி என்றாலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்'' என்றார் சந்தியா.