Pages

Wednesday, October 28, 2009

நடிகர் விஜய்க்கு விதிமுறைகளை மீறி

சென்னை, அக். 27: நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நிலம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஆர். கார்த்திகேயன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
சென்னையை அடுத்த பாடி கிராமத்தில் எனது தந்தை 2.37 ஏக்கர் நிலத்தை வாங்கினார். கொரட்டூர் சுற்றுப்புற பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நிலத்தை தமிழக அரசு 18.01.69-ம் தேதி கையகப்படுத்தியது.
இதில் 6 கிரவுண்ட் நிலத்தை 34 ஆண்டுகளாக வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தவில்லை. இதையடுத்து சட்டப்படி, அந்த நிலத்தை எங்களிடம் ஒப்படைக்கக் கோரி 15.11.06-ம் தேதி மனு அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது தாய், சகோதரர், சகோதரிகள் ஆகியோர் பெயரிலோ, மறைந்த தந்தை பெயரிலோ எந்த நிலமும் இல்லை.
எனவே, எங்களுக்கு சொந்தமான நிலத்தை வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
எங்களின் மனு மீது உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர், வீட்டு வசதி வாரியத் தலைவர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் எங்கள் கோரிக்கையை நிராகரித்து எங்களுக்கு 04.03.08-ம் தேதி கடிதம் எழுதினார்.
அதில், எங்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட மொத்த நிலத்தில் 0.84 ஏக்கர் நிலம் அம்பத்தூர் நகராட்சிக்கும், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு 1.15 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரியத்துக்கும், 0.38 ஏக்கர் நிலம் திராவிடம் பஞ்சாயத்து திட்டத்துக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எங்களிடமிருந்து பெறப்பட்ட நிலத்தில் (சர்வே எண் 194/2) சுற்றப்புறச் சுவர் எழுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது, நடிகர் விஜய்க்கு வீட்டு வசதி வாரியம் 0.27 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளதாக தெரியவந்தது.
இந்த நிலத்தை "திராவிடம் பஞ்சாயத்து திட்டத்துக்காக' வழங்கியுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் தெரிவித்திருந்தார்.
வீட்டு வசதி வாரியம் எந்த ஒரு தனி நபருக்கும் ஒரு கிரவுண்ட் நிலம் மட்டுமே வழங்க முடியும். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு விதிமுறைகளை மீறி 0.27 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, விஜய்க்கு நிலம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; அந்த நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
எண்ணாங்க அண்ணா பாவம் வீடு வசதி இல்லாம சாப்பாடுக்கே கஷ்ட படர நடிகருக்கு இடம் ஒதுக்கினா உங்களுக்கு தாங்க முடியலையா ?

- நக்கல் நாகராசன்

No comments:

Post a Comment