நூல் விலை உயர்வை சமாளிக்க, தமிழக நெசவாளர்கள் இப்போது கற்றாழை நாரிழையில் புடவை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் புடவைக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது.
மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட கற்றாழை இப்போது புடவைத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழக நெசவாளர்கள் இத்தகைய புடவைகளை சோதனை முறையில் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளனர்.
பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும் இந்த புடவை ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக சென்னையை அடுத்த அனகாபுத்தூர் நெசவாளர்கள், அதிக அளவில் புடவை தயாரிப்பில் கற்றாழையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் தங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
"கடந்த ஆண்டில் நூல் விலை தாறுமாறாக உயர்ந்ததால் நெசவுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
“வருமானம் குறைந்த நிலையில், நூல் பயன்பாட்டை குறைக்க, இயற்கையாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டு புடவை தயாரிக்க எண்ணினோம்.
“இதன் அடிப்படையில் முதன் முதலாக வாழை நாரை பயன் படுத்தினோம். இப்போது, கற்றாழை நாரிலிருந்து புடவை தயாரிக்கிறோம்.
“இந்த புடவைக்குத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கிறது," என அனகாபுத்தூர் நெசவாளர் சங்கத்தின் தலைவர் சேகர் தெரிவித்தார்.
"கற்றாழை புடவை மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இதற்கு முன்பு கூலியாக ஒரு நாளைக்கு ரூ.100 கிடைக்கும். இப்போது ரூ.150 கிடைக்கிறது," என மல்லிகா என்ற நெசவு தொழிலாளி தெரிவித்தார்.
Wednesday, October 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment