Pages

Monday, October 26, 2009

டிவி'யில் செக்ஸ்

துபாய் : "டிவி'யில் செக்ஸ் பற்றிய நிகழ்ச்சி தயாரித்த பெண் பத்திரிகையாளருக்கு சவுதி அரேபியாவில் 60 கசையடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் நாட்டு "டிவி' சேனல் கடந்த ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் ஜவாத் என்பவர் திருமணத்துக்கு முந்தைய தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசினார்.


இந்த நிகழ்ச்சி சவுதி அரேபியாவில் ஒளிபரப்பானது. இதற்காக ஜவாத்துக்கு ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த பெண் பத்திரிகையாளர் ரோசனா அல் யாமி என்பவருக்கு 60 கசையடி அறிவிக்கப்பட்டுள்ளது. செக்ஸ் பற்றி பகிரங்கமாக "டிவி' மற்றும் ரேடியோவில் பேசுவது சவுதியில் சட்ட விரோதமாக கருதப்படுகிறது. "போல்டு ரெட் லைன்' என்ற பெயரில் லெபனான் "டிவி' யில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சவுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசியது குற்றமாக கருதப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. "பத்திரிகையாளர் என்ற முறையில் தனது தொழிலை ரோசனா செய்துள்ளார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி அறிவித்துள்ளதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம்' என, ரோசனாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment