தங்கள் பெயரில் வங்கிக் கணக்குகளைத் திறந்து கடன்முதலைகளிடம் விற்ற15 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடன்முதலைகளின் பணவசூல் நடவடிக்கைகளுக்கு உதவ தங்களது பெயர்களின் வங்கிக் கணக்குகளைத் திறந்து தந்துள்ளனர்.
அத்துடன் ஏடிஎம் அட்டைகளையும் கொடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளனர். கடன்முதலைகளின் தொல்லையைத் தவிர்ப்பதற்காகவும் இதனைச் செய்துள்ளனர் என்றும் போலிஸ் அறிக்கை கூறியது.
பணத்துக்காக 15 பேரும் அப்படிச் செய்தது கொடுமையானது என்று சிறப்புக் குற்றவியல் புலனாய்வுத் துறையின் சூப்ரின்டன்டன் கோ லாம் கியோங் கூறினார்.
கடன்முதலைகளின் நடவடிக்கைகளில் உதவுபவர்களுக்கு கூடிய பட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் $200,000 அபராதமும் விதிக்கப்படலாம்.
Saturday, October 31, 2009
Subscribe to:
Post Comments (Atom)
The same method they should adopt in India also. Here foreign banks sending local goondas to collect the real loosers of credit card trap
ReplyDelete