Friday, October 23, 2009
கடவுளே அடுக்குமா இந்த நீதி ?
மதுரை, அக். 23: சுவாமி படங்களை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது பழனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
"வல்லமை தாராயோ' படத் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட நடிகை குஷ்பு, முப்பெரும் தேவியர் உருவப் படங்கள் முன் காலில் செருப்பு அணிந்து சுவாமியை அவமதிக்கும் வகையில் மேடையில் அமர்திருந்ததாக புகார் எழுந்தது.
அவரது செயல் இந்துக்களின் மனதைப் புண்படுத்துவது போல் உள்ளது. எனவே, அவர் மீது இந்துமத அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இந்து மக்கள் கட்சி திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், பழனி நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள சட்டவிதிகள்படி சுவாமியை அவமதித்ததற்கான எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. சுவாமியை அவமதிக்கும் நோக்கமும் குஷ்புவுக்கு இல்லை.
எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குஷ்பு சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ராஜ இளங்கோ முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பழனி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
கடவுளே அடுக்குமா இந்த நீதி ?
- நக்கல் நாகராசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment