இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்றுள்ள ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுதந்திர இந்தியாவில் இதுவரை இடம் பெறாத இமாலய ஊழல் என முக்கிய எதிர்க்கட்சி சாடி இருக்கிறது.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் ஆட்சியையும் இரண்டில் ஒன்று பார்க்கப் போவதாக அது சூளுரைத்து இருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது ஸ்பெக்ட்ரம் பிரச்சினையைப் பெரிதாக்கப் போவதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி காரசார மாகத் தெரிவித்தார்.
பாஜக அண்மைய தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வந்துள்ளது.
அது ஒருபுறம் இருக்க, கட்சிக்குள் உட்பூசல் தலைவிரித்து ஆடுகிறது.
இந்த நிலையில் அந்தக் கட்சி கடந்த 1980களிலும் 90களிலும் தான் கையில் எடுத்த ஆயுதத்தை மறுபடியும் எடுக்க திட்டம் போடுகிறது.
போபர்ஸ், ஹர்ஷாத் மேத்தா ஊழல்களைப் பெரிய அளவில் ஊர்அறியச் செய்து பாஜக அப்போது சிறப்பாகச் செயல்பட்டது.
அதையடுத்து இப்போது ஸ்பெக்ட்ரம் விகாரத்தில் இரண்டில் ஒன்று பார்க்க அந்தக் கட்சி இப்போது முடிவு செய்துள்ளது.
“நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த ஊழல் களிலேயே மிகப் பெரிய ஊழல் இது தான்.
“இந்த ஊழலை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் அமைச்சர் ராசா ஏதும் அறியாதவர் என்று பிரதமர் மன்மோகன் அறிவிப்பது விசாரணையை தடுமாறச் செய்யும் முயற்சி தான்.
“சிபிஐக்கு பொறுப்பான பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
“மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா அப்பாவி, குற்றமற்றவர் என்பதைப் போலப் பேசுவது விசாரணையைத் தடுமாறச் செய்துவிடும்.
“விசாரணையை பிரதமர் விரும்பவில்லை என்று அதிகாரிகளுக்கு குறிப்பால் உணர்த்தும் முயற்சிதான் இது. பொதுவாழ்வில் நேர்மை தேவை என்று கூறும் பிரதமரே, விசாரணையைச் சீர்குலைக்கும் நடவடிக்கை யில் இறங்கக்கூடாது.
“நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை நீக்க வேண்டும்,” என்று ஜேட்லி சொன்னார்.
இதற்கிடையே, அ£மைச்சர் ராசாவை எப்படியாவது நீக்கிவிட காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது என்றும் ஆனால் அதை திமுக அனுமதியுடன் செய்ய காங்கிரஸ் தலைவி சோனியா விரும்பவுதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.
விரைவில் முதல்வர் கருணாநிதியின் தூதர் ஒருவர் சோனியா காந்தியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் ராசா மீது நடவடிக்கை பாயலாம் என்றும் பேசப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒப்பந்தங்கள் எல்லாம் பிரதமரின் அனுமதியோடு இடம் பெற்றவை என்று திமுக சொல்கிறது.
Wednesday, October 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment