Thursday, October 29, 2009
டெண்டர் பெட்டியை உடைத்த அ.தி.மு.க.,
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில், டெண்டர் பெட்டியை உடைத்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நான்கு பேருக்கு, இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சப்-கோர்ட் தீர்ப்பளித்தது. பெரியகுளம் நகராட்சியில் 2007 செப்., 25 ல், ஆடு அடிக்கும் தொட்டி மற்றும் நவீன முறையில் குப்பைகள் சேகரித்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கான வேலைபெற, டெண்டர் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு டெண்டர் பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ராஜாமுகமது, பெருமாள், சந்தானம், பன்னீர்செல்வம் ஆகியோர் தகராறு செய்து டெண்டர்பெட்டியை உடைத்ததாக, நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ராமநாதன் தென்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் கவுன்சிலர்களை கைது செய்தனர். பெரியகுளம் சப்-கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி மோகன், அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டணையும், தலா ஆறாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment