அமிதாப் பச்சன் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெüலத்பூர் கிராம தலைவர் ராஜ்குமாரி சிங்கின் மகன் அவ்நிந்திர சிங் என்பவர் முகமதுபூர் போலீஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்துள்ளார் . இப்புகார் குறித்து காவல் கண்காணிப்பாளர் அலோக் சிங் கூறியதாவது:
'அமிதாப்பின் பிரதிநிதியான வினய் சுக்லா 2007-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி தெüலத்பூர் கிராமத் தலைவரிடம் கிராம சமாஜத்துக்கு நிலத்தை நன்கொடையாக வழங்க விரும்புவதாக கடிதம் அளித்துள்ளார்.ஆனால், அந்த நிலத்தை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஜெயப்பிரதா நடத்தும் நிஷ்டா பவுண்டேஷனுக்கு கல்லூரி கட்ட வழங்கிவிட்டார்.
கடந்த அக்டோபர் 23-ம் தேதி அந்த நிலம் நிஷ்டா பவுண்டேஷன் பெயரில் ஐஸ்வர்யாராய் பச்சன் பெயரில் கல்லூரி கட்ட நன்கொடை பத்திரம் மூலம் பதிவு செய்யப்பட்டது. ராஜேஷ் ரிஷிகேஷ் என்பவர் பவர் ஏஜெண்டாக செயல்பட்டு நிலப்பதிவை செய்தார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அமிதாப்பை சந்திக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.மாவட்ட ஆட்சியர் விகாஸ் கோத்வாலின் அனுமதியைப் பெற்று விரைவில் குழு அமைக்கப்படும். அந்த குழு நிலம் தொடர்பான ஆவணங்களை ஆராயும். குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
Wednesday, October 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment