கடந்த மாதத்தில் மட்டும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர் கூறியதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, முகாம்களில் 20 ஆயிரம் விடுதலைப் புலிகள் பொதுமக்களுடன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
முகாம்களில் உள்ள பொதுமக்களை அவர்களின் சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக ஜகத் ஜயசூர்ய தெரிவித்தார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment