ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்து முடிவெடுக்க அவசரப்படப் போவதில்லை என்றுஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
புளோரிடா கடற்படைத் தளத்தில் தேசிய சேவையாளர்களிடம் பேசியபோது திரு ஒபாமா இவ்வாறு கூறியதாக பிபிசி தகவல் கூறியது.
அத்தியாவசியம் இல்லையென்றால் கூடுதல் வீரர்களை அங்கு அனுப்பப்போவதில்லை என்று அவர் கூறினார். ஆப்கானுக்கான புதிய உத்தி குறித்து வெள்ளை மாளிகை வரும் வாரங்களில் முடிவு செய்யும் என்று தெரிகிறது.
ஆப்கானுக்கு கூடுதலாக குறைந்தது 40,000 அமெரிக்க வீரர்கள் தேவைப்படுவதாக அங்குள்ள அமெரிக்க உயர் ராணுவத் தளபதி ஜெனரல் ஸ்டான்லி மெக்ரிஷ்டல் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் ஆப்கானில் தற்போதைய அதிபர் கர்சாயும் தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லாவும் 2-ம் சுற்று வாக்களிப்புக்கு ஆயத்தமாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment