Friday, October 30, 2009
புது வீட்டில் அழகிரி
மத்திய அமைச்சராகி ஐந்து மாதங்களுக்கு பிறகு, தனக்கென ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இல்ல புது வீட்டில், அழகிரி குடியேறினார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, தமிழகத்தில் இருந்து அழகிரியும் அமைச்சரானார். முதன் முறையாக அமைச்சரானதால் , அவருக்கு வீடு ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதற்காக, டில்லி சப்தர்ஜங் சாலையில், ஏற்கனவே சுப்புலட்சுமி ஜெகதீசன் வசித்து வந்த வீட்டில், தற்காலிகமாக தங்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, அங்கு தங்கினார். அவருக்கென அதிகாரப்பூர்வ இல்லமாக, காமராஜர் சாலையில் உள்ள வீடு, ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment