Pages

Tuesday, October 27, 2009

காரில் பயணம் செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது

பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்துள்ளது.
பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது குறித்து நிலப்போக்குவரத்து வாரியம் 10,000 குடியிருப்பாளர்களிடம் 2008ம் ஆண்டில் ஆய்வு நடத்தியது.
அதன்படி, 1997ம் ஆண்டில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்ஐக 2004ம் ஆண்டில் 63% ஆகவும் 2008ம் ஆண்டில் 59% ஆகவும் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
காரில் பயணம் செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எண்ணிக்கை குறைவதற்கு ஒரு காரணம்.
ஆய்வு நடத்தப்பட்ட காலத்தில் பொதுப் போக்குவரத்தின் பிரதான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணயம் தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்தின் பயண எண்ணிக்கை 24 விழுக்காடு கூடியுள்ள போதிலும், மக்கள் தொகையின் பயன்பாட்டு அடிப்படையில் கணக்கிடும்போது பயன்படுத்து வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
“பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும், பலரையும் கவர்ந்த பொதுப் போக்குவரத்தாக எம்ஆர்டி விளங்குகிறது,” என்று போக்குவரத்து அமைச்சர் ரேமண்ட் லிம் தெரிவித்தார்.
பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருவது, நிலப்போக்குவரத்து வாரியத்தின் பெருந்திட்டம் எதிர்நோக்கும் முக்கிய சவால் என்பதையும் அமைச்சர் சுட்டினார்.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான பொதுப் போக்குவரத்தின் விரிவாக்கம், மேம்பாட்டுக்கான பெருந்திட்டம் கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
வரும் 2020ம் ஆண்டுக்குள் ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை இரட்டிப்பாக்குவது, சாலையில் வாகனங்களைக் குறைப்பது போன்றவை அவற்றில் சில.பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் குறைந்துள்ளது.
பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது குறித்து நிலப்போக்குவரத்து வாரியம் 10,000 குடியிருப்பாளர்களிடம் 2008ம் ஆண்டில் ஆய்வு நடத்தியது.
அதன்படி, 1997ம் ஆண்டில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 67 ஆக இருந்தது.
இந்த எண்ணிக்ஐக 2004ம் ஆண்டில் 63% ஆகவும் 2008ம் ஆண்டில் 59% ஆகவும் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
காரில் பயணம் செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது எண்ணிக்கை குறைவதற்கு ஒரு காரணம்.
ஆய்வு நடத்தப்பட்ட காலத்தில் பொதுப் போக்குவரத்தின் பிரதான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததும் மற்றொரு காரணமாக இருக்கலாம் என்றும் நிலப் போக்குவரத்து ஆணயம் தெரிவித்தது.
பொதுப் போக்குவரத்தின் பயண எண்ணிக்கை 24 விழுக்காடு கூடியுள்ள போதிலும், மக்கள் தொகையின் பயன்பாட்டு அடிப்படையில் கணக்கிடும்போது பயன்படுத்து வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
“பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும், பலரையும் கவர்ந்த பொதுப் போக்குவரத்தாக எம்ஆர்டி விளங்குகிறது,” என்று போக்குவரத்து அமைச்சர் ரேமண்ட் லிம் தெரிவித்தார்.
பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருவது, நிலப்போக்குவரத்து வாரியத்தின் பெருந்திட்டம் எதிர்நோக்கும் முக்கிய சவால் என்பதையும் அமைச்சர் சுட்டினார்.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான பொதுப் போக்குவரத்தின் விரிவாக்கம், மேம்பாட்டுக்கான பெருந்திட்டம் கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
வரும் 2020ம் ஆண்டுக்குள் ரயில் போக்குவரத்துக் கட்டமைப்பை இரட்டிப்பாக்குவது, சாலையில் வாகனங்களைக் குறைப்பது போன்றவை அவற்றில் சில.

No comments:

Post a Comment