
கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் பரபரப்பாக பேசப்படும் கேரக்டர்களில் ஒன்று ரிப்போர்ட்டர் கேரக்டர். படத்தில் ரிப்போர்ட்டராக நடித்த அனுஜா ஐயர், சிவி
என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு முதல் முதல் முதல் வரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்த அனுஜா அந்த படங்களில் எல்லாம் பேசப்படவில்லை. ஆனால் உன்னைப்போல் ஒருவனின் ரிப்போர்ட்டராக நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
தற்போது அவருக்கு சிம்புவின் வாலிபன் படத்தில் ஜோடி போட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
No comments:
Post a Comment