ஒரிசாவில் இருந்து டில்லிக்கு சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை, நேற்று முன்தினம் மேற்கு வங்கம் மிட்னாபூர் மாவட்டத்தில், நக்சலைட்களின் ஆதரவு பெற்ற, "போலீஸ் அத்துமீறலுக்கு எதிரான மக்கள் குழு' என்ற பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறை பிடித்தனர்; 1,200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிறை பிடிக்கப்பட்ட அந்த ரயிலை, போலீசார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக சண்டையிட்டு மீட்டனர். ஆனால், நக்சலைட்கள் தான் ரயிலை சிறை பிடித்தனர் என, மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது. இது போன்ற ரயில் கடத்தல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் தொடரும். நக்சலைட்களும், அவர்களின் ஆதரவு பெற்ற பழங்குடியினரும் அதை நிறைவேற்றலாம் என, மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதே நேரத்தில், நக்சலைட்களின் ஆயுதப் புரட்சியும் தொடரும் என்றும் கூறியுள்ளது.

No comments:
Post a Comment