Pages

Saturday, October 24, 2009

முக்கிய போதைப் பொருள் கும்பல் கைது


அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப் பொருள் கும்பலை அமெரிக்கப் குற்றத் தடுப்பு அமைப்புகள் கைது செய்துள்ளன.
இதில் இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் குறைந்தது 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
அத்துடன் பல டன்கள் எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டதாகவும் அந்தத் செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ‘ லா ஃபேமிலியா ’ என்று பெயர்கொண்டு அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் பரந்து விரிந்து கிடக்கும் போதைப் பொருள், அதன் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலை அமெரிக்க அரசாங்கம் கடந்த 2005ம் ஆண்டிலிருந்தே ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக அது 3,000 பேர் அடங்கிய மத்திய போலிஸ் படையினரை நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தியது.
இவர்கள் இதுவரை கிட்டத்தட்ட 1,200 சந்தேகப் பேர்வழிகளை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றிக் கருத்துக் கூறிய அமெரிக்கத் தலைமைச் சட்ட அதிகாரி திரு எரிக் ஹோல்டர், “ எங்களது இந்தக் கைது நடவடிக்கையால் அமெரிக்கா, மெக்சிகோ இரு நாடுகளுக்கு இடையேயுள்ள இந்தக் கும்பலின் சட்டவிரோத போதைப் பொருட்கள், ஆயுதங்கள், ரொக்கப் பண விநியோகக் கட்டமைப்பை முறித்துவிட்டோம், ” என்றார்.
இந்தச் சோதனையில் 32 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 2,000 கிலோ கிராம் கொகேய்ன், 7,257 கிலோ கிராம் கஞ்சா ஆகியவை பிடிபட்டன.

1 comment:

  1. Its shocking news ? Where they are selling these drugs ? Inside America ? Or traffiking to other countries also.Now people will know from where the drugs are coming ? Three genereations back America and Briton pushed opium in to china .Now? Another way of draining the other countries super brain youths.

    ReplyDelete