Pages

Wednesday, October 28, 2009

பிரபுதேவாவின் "லேட்டஸ்ட் சாய்ஸ்' நயன்தாரா

விஜய் நடித்த "போக்கிரி' படம், ஹிந்தியில் பிரபுதேவா இயக்க சல்மான்கான் நடிப்பில் "வான்டட்' என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருக்கிறார் போனிகபூர். இதிலும் பிரபுதேவா-சல்மான்கான் கூட்டணி இணைகிறது; இதில் பிரபுதேவாவின் "லேட்டஸ்ட் சாய்ஸ்' நயன்தாரா நாயகி எனவும் தகவல். படத்துக்கு "மோஸ்ட் வான்டட்' என தலைப்பு வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் "வான்டட்' இரண்டாம் பாகம் தயாரிப்பது பற்றி ஆலோசனை மட்டும் நடத்தி வருகிறோம் என்கிறது தயாரிப்பு தரப்பு. "மோஸ்ட் வான்டட்' தயாரிப்பு உறுதியானால், இதன் மூலம் நயன்தாரா ஹிந்திப் படவுலகுக்குச் செல்லும் வாய்ப்பு உறுதி.

No comments:

Post a Comment