Saturday, October 24, 2009
நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு ?
சமீபத்தில் திருச்சி சின்னக்கடைவீதியில் உள்ள நகைக்கடையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக நடிகை சினேகா திருச்சி சென்றிருந்தார். நகைக்கடை விழாவில் கலந்து கொண்ட சினேகாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் நகைக் கடை முன் திரண்டிருந்தார்கள். விழா முடிந்ததும் கடை மேடையிலிருந்து, நடிகை சினேகா கீழே இறங்கினார். அப்போது, கூட்டத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென சினேகாவின் இடுப்பை கிள்ளினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சினேகா, கடை உரிமையாளரிடம், இடுப்பை கிள்ளிய நபரை குத்து மதிப்பாக அடையாளம் காட்டி, கிளம்பிச் சென்றாராம் . இதையடுத்து நடிகை குத்து மதிப்பாக காட்டிய வாலிபரை கடை ஊழியர்கள் தர்ம அடி கொடுத்து கடைக்கு இழுத்து வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், "வாலிபரை எதற்கு அடிக்கிறீர்கள்?' எனக் கேட்டனர். ஆனால் கடை ஊழியர்கள் போலீசாருக்கு பதிலளிக்காமல், போலீசாரை ஒருமையில் திட்டி, வாலிபரை இழுத்துச் சென்றனர். பின்னர் வெளியே வந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்தனர். அவர், திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த சுரேஷ்குமார் (33) என்பதும், சினேகாவின் இடுப்பை கிள்ளிய விவரமும் தெரிந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரையும், தங்களை ஒருமையில் திட்டிய பாதுகாப்பு பணியாளர்களையும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் சமாதானப்படுத்தியதால் அவர்களை விட்டு விட்டு போலீசார் சென்று விட்டனர்.
சுரேஷ்குமாரின் மனைவி விடவில்லை ! கோட்டை போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கணவரை கண்மூடித்தனமாக தாக்கிய கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கடை ஊழியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சுரேஷ்குமாரின் மனைவி ஷர்மிளா கூறுகையில், நானும், என் கணவர் சுரேஷ்குமாரும் தீபாவளி பர்ச்சேசுக்காக சின்னக்கடைவீதி சென்றோம். அப்போது, நடிகை சினேகா பங்கேற்ற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென, "புளூ கலர் சட்டை போட்டவர், என் இடுப்பைக் கிள்ளினார்' என, சினேகா கூறியதாகத் தெரிகிறது. விழா நடந்த இடத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் என்னுடன் நின்றிருந்த என் கணவர் சுரேஷ்குமாரை, கடை ஊழியர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், என் கணவர் சட்டை கிழந்தது. "தவறு ஏதும் செய்யாத என் கணவரை அடிக்காதீர்கள்' என நான் அழுதும், கடை ஊழியர்கள் தொடர்ந்து தாக்கினர். "இதைப் பார்த்து ஏன் அடிக்கிறீர்கள்?' என கேட்ட போலீசையும், கடை ஊழியர்கள் தள்ளி விட்டனர். என் கணவர் மீது பொய்யான புகார் கூறிய நடிகை சினேகா, கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளேன். நடிகை சினேகா செல்லுமிடங்களில் எல்லாம் பப்ளிசிட்டிக்காக இதுபோன்று நடந்து கொள்கிறார், என்றார்.
புப்ளிசிட்டி ஸ்டண்ட் தெரியாத அம்மணி உங்களுக்கு ? எதுக்கு சினிமா கரங்க வாராங்கன்னு தெரிஞ்சும் அந்த கடைக்கு போனீக ? அது அவக ஸ்டைல் ? அவக புகார் குடுத்த உடனே நடவடிக்கை எடுப்பாக , முதல் தகவல் அறிக்கை எழுதவாக .உங்க புகாரை எடுத்தது பெரிய விஷயம் . ஊட்டுக்குள்ள ஒரு போட்டி இருக்கு இல்லே ? அதை ஆப் பண்ணி வைக ! இல்ல அந்த நடிகையை பார்த்தாலே உங்க இரத்தம் சூடு ஆவும்.?
- நக்கல் நாகராசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment