Pages

Monday, October 26, 2009

கருணாநிதி இரட்டை வேடம் ஜெயலலிதா


பகுத்தறிவுக் கொள்கையில் முதல்வர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பகுத்தறிவுவாதி என கூறிக் கொள்ளும் கருணாநிதி, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், எமதர்மர் உயிரைப் பறிப்பது போலவும், அதை இவர் தடுப்பது போலவும் சித்திரித்துள்ளார்.இதனால் தன்னுடைய முகமூடியைக் கிழித்துக் கொண்டு, தன்னுடைய சுயரூபத்தை, தன்னுடைய உண்மைத் தன்மையை தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.குங்குமப் பொட்டு வைத்துக் கொள்ளும் தி.மு.க.வினரையும், தீ மிதிக்கும் கட்சிக்காரர்கள் மற்றும் அமைச்சர்களையும் அவ்வப்போது கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இந்து சமயக் கடவுள்களை கொச்சைப்படுத்தியும், நிந்தித்தும், தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக் கொண்டிருந்தார் கருணாநிதி.

ஆனால், கருணாநிதி குடும்பத்தினரோ இறை வழிபாட்டிலும், ஜோதிடம், பரிகாரம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகின்றனர். கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவதும் இதனால் ஏற்பட்டதே. பகுத்தறிவாளர் கருப்பு துண்டுதானே அணிய வேண்டும் என்று பலர் வினாக்கள் எழுப்பியும், கருணாநிதி அதற்கு விளக்கம் அளிக்கவில்லை.

திருக்குவளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கருணாநிதி பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.இப்போது பகுத்தறிவுக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிராக, எமதர்மரை கருணாநிதி தடுக்கும் விளம்பரம் வந்துள்ளது. இவ்வளவு நாள் இலை மறை காய் மறையாக இருந்த கருணாநிதியின் கடவுள் நம்பிக்கை இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.இதன் மூலம் தான் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்; உறுதியற்ற தன்மை உடையவர் என்பதை கருணாநிதி வெளிப்படுத்தி இருக்கிறார்.
முல்லை பெரியாறு போன்ற பிரச்னைகளில் தமிழர்களின் உரிமைகள் பறிபோவதை தடுத்து நிறுத்த முடியாத கருணாநிதி, தன்னை "காலம் வீசும் கயிற்றைத் தடுப்பவர்' போல் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. கருணாநிதியின் இந்த இரட்டை வேடத்தை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. Where are you Madam ? Suddenly you are coming in the limelight ? Suddenly You are not to be seen in the Media ?

    ReplyDelete