Friday, October 23, 2009
தலைவன் நடந்தால் தொண்டர்கள் படுத்து விடுவார்கள்: ரஜினி
"ஒரு தலைவன் பறந்தால், தொண்டர்கள் ஓடி வருவார்கள். நடந்து சென்றால் அவர்கள் படுத்து விடுவார்கள்'' என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
தொழிலாளிகளும், முதலாளிகளும் ஒன்று சேர்ந்திருக்கின்ற அரங்கம் இது. சினிமா தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வீடு கட்ட இடத்தை ஜெயலலிதா கொடுத்திருந்தார்கள். ஆனால் அந்த இடம் தூரமாக இருப்பதாகக் கூறி ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது கொஞ்சம் தூரம் தள்ளி கொடுத்தாலும் அதை வாங்கி கொள்ளுங்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு எனச் சொல்லிய தலைவனின் தோட்டத்தை வனமாக்கி அந்த வனத்தில் தேசிய கட்சிகளையெல்லாம் கலைஞர் இளைப்பாற செய்துள்ளார்.
அண்ணாவின் கழகத்தை வளர்த்தவர் கலைஞர். பராசக்தி படம் இல்லை பாடம். மனோகராவில் வந்த இரும்பு சங்கிலிகள் உடையும் காட்சியின் போது படக்குழு, இறைவனின் சக்தியில் சங்கிலிகளை உடையுமாறு அமைத்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். ஆனால் கலைஞர் தன் வசனங்களால் அந்த சங்கிலிகள் உடையுமாறு ஆக்கினார். கலைஞரின் எழுத்துகளின் வேகத்தில் அந்த சங்கிலி உடைந்தது. எழுதுகோலை செங்கோல் ஆக்கியது நீங்கள் மட்டும் தான். அதனால்தான் எழுதுகோலை நீங்கள் இன்னும் அருகிலே வைத்திருக்கிறீர்கள்.
கலைஞர் ஏன் எப்படி உழைக்கிறார் என யோசித்துப் பார்க்கிறேன். ஒரு தலைவன் பறந்து போனால் தொண்டர்கள் ஓடி வருவார்கள். தலைவன் ஓடினால் தொண்டர்கள் நடக்கத் தொடங்கி விடுவார்கள். தலைவன் நடந்தால் தொண்டர்கள் படுத்து விடுவார்கள். கலைஞருக்கு உலக கலை படைப்பாளி விருது மகிழ்ச்சிக்குரியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment