கேரள பஞ்சாங்க அடிப்படையில்தான் , மண்டல காலபூஜைக்காக சபரிமலை நடை 15ம் தேதி மாலையே திறக்கப்பட்டு, 16ம் தேதி முதல் மண்டலகால பூஜை ஆரம்பமாகும் .தமிழக பஞ்சாங்கப்படி விரதமிருந்தால், 40 நாட்கள் தான் விரதமிருக்க முடியும். குறிப்பாக, முதன் முதலாக மாலையணியும் பக்தர்களுக்கு இது தர்மசங்கடமாக இருக்கும். எனவே, மண்டல பூஜையில் முறைப்படி விரதமிருந்து கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், நவம்பர் 16ம் தேதியே மாலை அணிந்தாக வேண்டும்.
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறும்போது, ""இதுபோல ஒரு நாள் வித்தியாசம் கேரள, தமிழக பஞ்சாங்கங்களில் ஏற்படுவது வழக்கமானதுதான். மண்டல கால விரதம் என்பது 41 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். நவ.,16ம் தேதி கேரளாவில் கார்த்திகை ஒன்று. சபரிமலை மண்டல காலத்தை கணக்கில் கொள்பவர்கள் 16ம் தேதி மாலை அணிந்து கொள்ள வேண்டும். எனினும், தமிழக கோவில்கள் ஆசாரப்படி மண்டலகால விரதத்துக்காக 17ம் தேதி மாலை அணிவதிலும் தவறில்லை. அதுபோல சபரிமலை உட்பட கேரளாவின் அனைத்து கோவில்களிலும் மண்டல பூஜை வழக்கமான டிசம்பர் 27ம் தேதிக்குப் பதிலாக, 26ம் தேதியே நடந்து விடும். 27ல் நடை அடைக்கப்பட்டு விடும். ஒருநாள் விடுபடுகிறது என்பதற்காக பக்தர்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை. தங்கள் விருப்பப்படி இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்,'' என்றார்.

No comments:
Post a Comment