Friday, October 23, 2009
சீனாவின் பொருளியல் 8.9% வளர்ச்சி
பெய்ஜிங்
சீனாவின் பொருளியல் இந்த மூன்றாவது காலாண்டில் 8.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி அபார வளர்ச்சியாகக் கருதப்படுகிறது.
2009-ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் இலக்கு 8 விழுக்காடு. திட்டமிட்டபடி இந்த இலக்கை எட்டி விடுவோம் என்று தேசிய புள்ளிவிவர இலாகா அதிகாரிகள் கூறினர்.
பொருளியல் ஊக்குவிப்பு திட்டங்களுக்காக சீன அரசாங்கம் அதிகம் செலவு செய்தது. அதன் பலனை இப்போது அது அடைந்திருப்பதாக சீன அரசாங்கம் கூறியது.
உலகளாவிய பொருளியல் நெருக்கடியிலிருந்து விடுபட்டு சீனா இவ்வளவு விரைவாக வளர்ச்சியை எட்டியிருப்பது பல நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகளாவிய நிலையில் பொருளியல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு சீனாவின் பொருளியல் ஈரிலக்க வளர்ச்சி கண்டு வந்தது.
உலகிலேயே பொருளியல் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகள் வரிசையில் சீனா முதலிடத்தில் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment