
வாஷிங்டன்: அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடுட்ட ஐம்பதிர்க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் . விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு காரணமான புரோக்கர்கள் 60 பேர் உள்பட 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சமீப காலமாக இந்த பிரச்சனை சற்று கொடி கட்டி பறக்க துவங்கியதுடன் அமெரிக்க போலீசாருக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் முயற்சி , கெடு செயல் அங்குள்ள கலாச்சாரத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது கூடுதல் குற்றச்செயல்களையும் அதிகரித்து வருகிறது. இதனை ஓடுக்கவும், தடுக்கவும் அமெரிக்க உளவு படை போலீசார் ( எப். பி. ஐ., ) கடும் நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போலீசார் கடும் சோதனை மேற்கொண்டனர். இதில் பல பகுதிகளில் விபசார தொழில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் 52 பேரை போலீசார் மீட்டனர். உடந்தையாக இருந்த 60 புரோக்கர்கள் சிக்கினர். மேலும் மொத்தத்தில் இது தொடர்பாக நாடு முழுவதும் நடந்த வேட்டையில் 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க எப்.பி. ஐ., (குற்றப்புலனாய்வு ) துறை உதவி இயக்குனர் கெவின் பெர்க்கின்ஸ் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் இந்த குழந்தை விபசாரம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் அதிகரிக்க ஏதுவாக அமைந்து விட்டது. இக்குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு வழங்குவதை விட வேறு ஏதும் முக்கிய பணியாக இருக்க முடியாது. இதன் காரணமாக நாடு முழுவதும் எப்.பி.ஐ., மற்றும் லோக்கல் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி நாட்டில் 36 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடும் நடவடிக்கை காரணமாக கடந்த காலங்களை விட இந்த சம்பவம் குறைக்கப்பட்டு வருவதாகவும் கெவின் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள தேசிய குழந்தைகள் மீட்பு அமைப்பினர் மூலமாகவும் இது வரை 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது போன்ற செயலுக்கு காரணமானவர்கள் 500 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment