குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ரஷிய நாட்டில் பயணம் மேற்கொண்டிருந்த மோடி புதன்கிழமை குஜராத் திரும்பினார். அவருக்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருந்தது. இதைத்தொடர்ந்து மோடியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தனர்.
மோடியின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனை முடிவுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அடுத்த 7 நாள்களுக்கு தனிப்பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்படும் என்று மருத்துவர்கள் குழு மேலும் தெரிவித்தது.
Friday, October 30, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment