Monday, October 26, 2009
இதுவரை 68 ஆயிரம் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்
புதுடில்லி : "இலங்கை அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களில், இதுவரை 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்' என, டி.ஆர்.பாலு, எம்.பி., கூறியுள்ளார்.
இலங்கை சென்று திரும்பிய எம்.பி.,க்கள் குழுவுக்கு தலைமையேற்ற டி.ஆர்.பாலு எம்.பி., டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:இலங்கையில் அகதிகள் முகாம்களில் இருந்து, தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று முல்லைத் தீவுக்கு 1,021 தமிழர்களும், யாழ்ப்பாணத்துக்கு 3,200 பேரும், வவுனியாவுக்கு 1,000 பேரும், திரிகோணமலைக்கு 59 பேரும், மட்டக்களப்புக்கு இரண்டு பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இதுவரை 68 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள், முகாம்களில் இருந்து அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.
இதற்கிடையே, "அப்பாவி மக்கள் தங்கியுள்ள முகாம்களின் நிலை திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. முகாம்களில் உள்ள மக்களின் நலனுக்காக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியதாக உள்ளது'என, இலங்கைக் கான அமெரிக்க தூதர் புட்னீஸ் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Now Mr.T.R.Balu giving statment like this. Day before yesterday Red Cross Society given back the 'vangaman'stuffs without saying no reason.Who is behind all these acts.Really their srilankan tamils are safe ? Its million dollar question. Press media and visual media and thro internet we are getting different kind of pictures.Which one is true.Only God only knows.In India no journalist have the guts to visit the place and write the truth ? Are they afraid to go ? Are they are getting monitory benifet from the Srilankan government.Rama , Kualang , Malaysia
ReplyDelete