Pages

Saturday, October 31, 2009

5.7 மில்லியன் பேருக்கு அமெரிக்காவில் எச்1என்1 வைரஸ் காய்ச்சல்

வாஷிங்டன்
அமெரிக்காவில் எச்1என்1 வைரஸ் காய்ச்சல் பரவத் தொடங்கிய முதல் நான்கு மாதங்களில் 5.7 மில்லியன் பேருக்கு அக்கிருமி தொற்றியிருக்கலாம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
அங்குள்ள ஆய்வுக் கூடங்கள் உறுதிப்படுத்திய எண்ணிக்கையை விட இது 100 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கடந்த நான்கு மாதங்களில் 1.8 மில்லியனுக்கும் 5.7 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் அக்கிருமியால் பாதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
இவர்களில் 21,000 பேர் வரை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டதாக ஆய்வாளர்கள் வெளியிட்ட அறிக்கை கூறியது. அமெரிக்காவில் 300 பேர் இக்காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதாக அதிகாரத்துவ தகவல்கள் கூறின.

No comments:

Post a Comment