
இலங்கை தமிழர் பிரச்னையில் முள்வேலி முகாமில் விடுவிக்கப்பட்ட தமிழர் களை மீண்டும் முகாமில் அடைத்து விட்டனர்.இலங்கை தமிழர் பிரச்னைக்காக விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை மேற்கொள்ள உள்ளோம். சென்னையில் பா.ம.க., தலைவர் ராமதாஸ், ராமேஸ்வரத்தில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, கன்னியாகுமரியில் இந்திய கம்யூ., பொதுசெயலாளர் தா.பாண்டியன் தலைமையிலும், கோவையில் நானும் இப்பயணத்தை மேற்கொள்கிறோம். நவ., 2ம் தேதி திருச்சியில் பயணத்தை முடித்து, பொதுக்கூட்டத்தில் பேச உள்ளோம். இந்நிகழ்ச்சியில் கட்சிக் கொடிகளுக்குப் பதில் கருப்பு கொடியுடன் தொண்டர்கள் பங்கேற்பர் என்றார்.
No comments:
Post a Comment