Pages

Wednesday, October 28, 2009

மந்த்ராலயம் நவம்பர் ஒன்றாம் தேதி

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள மந்த்ராலயம் நவம்பர் 1-ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் பெய்த மழை வெள்ளத்தால் மகான் ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ள மந்த்ராலயம் பலத்த சேதமடைந்தது.

சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 25-10-2009 அன்று பரிகார பூஜைகள் மற்றும் யாக பூஜைகள் நடத்தப்பட்டன. சென்னை, பெங்களூர் மற்றும் மந்த்ராலயத்தைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் அதில் பங்கேற்றனர்.மந்த்ராலயத்தின் தலைமை பீடாதிபதி ஸ்ரீ சுயதீந்திர தீர்த்த சுவாமிகள் தலைமையில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மந்த்ராலயத்துக்கு இப்போது ரயில்களும், பஸ்களும் இயங்க தொடங்கியுள்ளன.

நவம்பர் 1-ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்காக மந்த்ராலயம் திறக்கப்படும். அன்று முதல் வழக்கம் போல அபிஷேகம், தங்கரதம் மற்றும் நித்யபூஜைகளும் அன்னதானமும் நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment