மீரா , ஸ்காட்லாந்து .
நடிகர் சூர்யா தான் பேசவே இல்லை பத்திரிகைகள் திரித்து வெளியிடுகின்றனர் என்று கூறியுள்ளாரே ?
தினமலர் செய்தியை பாருங்கள் . இவர் உத்தமனின் புத்திரர்தான் . பேசியது உண்மை தான் .
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தான் பேசிய கருத்துக்கள் திரித்துக்கூறப்படுவதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அவர் அளித்துள்ள விளக்க கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிற ஒரு மேடையில் என் கருத்துக்களை நான் பகிர்ந்து கொண்டேன். ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்ட போது நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மன உளைச்சல்களை சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மீடியாவைச் சேர்ந்த நண்பர்கள் தான் ஆதாரமான செய்திகளை வெளியிட்டு எனக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.
என்னுடைய பேச்சில், அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய, சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிற, எல்லோருக்கும் ஆசிரியராக இருக்கிற அருமையான தொழில் என்றே பத்திரிக்கைகளைப் பற்றி நான் சொன்னேன். அவதூறு செய்திகளைப் பற்றி நான் பேசிய கருத்துக்கள், ஒட்டுமொத்த மீடியாவைப் பற்றி நான் பேசியதாக செய்திகள் வெளிவருகின்றன. என் மீது அக்கறையுள்ள பத்திரிக்கை நண்பர்களும் என்னிடம் இதுகுறித்து பேசினார்கள். நான் பேசிய கருத்துக்கள் ஒட்டுமொத்த பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் சொன்னதாக திரித்துக் கூறப்படுகிறது.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கை உலகத்தோடு என் குடும்பம் நல்லுறவு பேணி வந்திருக்கிறது என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. உண்மைக்கு மாறான அத்தகைய திரிபுகளை உங்கள் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வரவே இந்த விளக்கம். பத்திரிக்கை நண்பர்களோடும், மீடியா உலகத்தோடும் எனக்கு இருந்து வரும் ஆரோக்கியமான நல்லுறவை நான் பெரிதும் மதிக்கிறேன். என் கருத்துக்கள் தவறாக திரிக்கப்படுவதைக் கவனத்துக்குக் கொண்டு வந்த என் பத்திரிக்கை நண்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆதாரம் உள்ளது: நடிகர் சங்கக் கூட்டத்தில் பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்து நடிகர் சூர்யா பேசியதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் பத்திரிகை அலுவலஙகளில் உள்ளன.
சூர்யா பேசியதென்ன?: (கண்டன கூட்டத்தில் நடிகர் சூர்யா பேசியதை அப்படியே வாசகர்கள் பார்வைக்கு தருகிறோம்.) சூர்யா பேசியதாவது: பத்திரிகை என்பது காலையில் எழுந்தால் சமுதாயம் எப்படி இருக்கணும், எதை நோ்க்கி போகணும், என்ன கவனம் செலுத்தனும்ங்கிற விஷயங்களை சொல்லணும். பத்திரிகைகள் ஒரு வழிகாட்டியா இருக்கணும். ஆசிரியர் பணியை ஆற்றணும். நிறைய பத்திரிகைகள் நான் கேட்காமலேயே எங்க வீட்டுக்கு நிறைய பத்திரிகைகள் வருது. அதையெல்லாம் நானே எத்தனையோ தடவை கிழிச்சி குப்பை தொட்டியில போட்டிருக்கிறேன். ஏன்னா அத சின்ன வயசுக்காரங்க பார்க்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான். ரொம்ப அருமையான தொழில். நிறைய தடவை இதுபோல நடந்திருக்கு. நானே பாதிக்கப்பட்டிருக்கேன். என் குடும்பத்தில் இருக்கிறவங்களும் பாதிக்கப்பட்டிருக்காங்க. சாப்பாடுக்கு காசு இல்லாம வயித்தை கழுவுறாங்கன்னு அவங்க இப்படியெல்லாம் தொடர் எழுதுறத வச்சு தெரிஞ்சுக்கலாம். இதுக்கு சட்ட நடவடிக்கை ரொம்ப முக்கியம். அதுக்கு எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் நான் கொடுக்கிறேன்.
கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதிட்டு இருப்பாங்க. அவங்க பின்னாடி ஓடிட்டு இருக்கிறது நம்ம தொழில் கிடையாது. அத வன்மையா கண்டிக்கணும். நமக்கு என்னென்ன உரிமை இருக்கோ.. என்னென்ன சக்தி இருக்கோ... அத எல்லாத்தையுமே பயன்படுத்தி இவங்களை நசுக்கணும். திரும்ப இது மாதிரி ஒருத்தங்க யோசிக்கவே கூடாது. அந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கணும். முதல்வருக்கு ரொம்ப நன்றி. நாங்க எல்லோருமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம். எதிர்காலத்துல இப்படியொரு கூட்டம் இந்தவொரு காரணத்துக்காக கூடவே கூடாது. சேர்ல இருக்கும்போது சேருக்கு அடியில போய் போட்டோ எடுக்கிறது... இதெல்லாம் ரொம்ப கேவலம். தயவு செய்து இதையெல்லாம் பண்ணாதீங்க, என்றார்.
இதனை வருடம் அப்பா சேர்த்து வைத்திருந்த பெயரினை போட்டு உடைத்து விட்டார் சூர்யா .
- நக்கல் நாகராசன்
Thursday, October 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என்ன மிஸ்டர் சூர்யா ? முதல்வருக்கு சினிமா காரங்க பின்னால ஓடி வராதுதான் வேலையா . உங்க காட்டமான பேச்சுக்கு அவரை என் இழுக்கறீங்க
ReplyDeleteAre you not ashamed Mr.Soorya ? your father never had a bad opinion in the cine industry. You spoiled his reputation for your premeditated talk.Do you think press wala will leave you ? Never ever make more enemies .
ReplyDelete