Pages

Saturday, October 31, 2009

விஜய்க்கு இன்னமும் நடிப்பு ஆசை விடவில்லை

ஞாபகங்களில் அடி வாங்கிய பாடலாசிரியர் விஜய்க்கு இன்னமும் நடிப்பு ஆசை விடவில்லை பாவம் .இப்போது அடுத்த படத்துக்கு தயாராகி இருக்கும் அவர் சொன்னது "நான் முதல்ல நடிக்கணும்னு முடிவு பண்ணினப்போ எழுதிய கதை பிரபா. இது ஆக்ஷன் கதை. அறிமுகமாகும் போதே ஆக்ஷனா பண்ணினா நல்லா இருக்காதுன்னு நண்பர்கள் சொன்னாங்க. அதனால, ஞாபகங்கள் கதையை எடுத்தேன். இந்தப் பட ரிலீசுக்குப் பிறகுதான், அறிமுகமாகும் போது யாருக்கும் எந்த இமேஜும் இல்லைன்னு புரிஞ்சது. அதனால அடுத்த படமான பிரபாவுல ஆக்ஷன் நாயகனாக நடிக்கிறேன். இது என்னை இன்னொரு இடத்துக்கு கொண்டு போகும்னு நம்புறேன். பிரபா எல்லா தரப்பினரும் ரசிக்கக் கூடிய படமா இருக்கும். ஞாபகங்கள் வேற மாதிரியான கதை. அதுல சில விஷயங்களை சேர்க்க முடியாம போச்சு. ஆனா, இது கமர்சியலான கதை. தாகம் எடுத்தவன் தண்­ணீரைத் தேடுகிறான். தண்­ணீரும் தாகமெடுத்தவனையே தேடுகிறதுன்னு ஒரு வாசகம் இருக்கு. அதே போல நான் வெற்றியை தேடுறேன். வெற்றியும் என்னைதான் தேடுதுன்னு நம்பிக்கையோடு பயணம் தொடர்ந்துகிட்டிருக்கு" என்றார்.

No comments:

Post a Comment