Pages

Friday, October 30, 2009

ரயில்வேயின் மங்களூர்- ஷாரனூர் இடையே,

கோழிக்கோடு: பயணிகளின் போதுமான வரவேற்பு இல்லாததால், லாபமற்ற நிலையில் இயங்கிவரும் 14 ரயில் நிலையங்களில், எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்துவதை ரத்து செய்ய ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் மங்களூர்- ஷாரனூர் இடையே, எக்ஸ்பிரஸ் ரயில்கள், தற்போது நிறுத்தப்பட்டு வரும் 14 ரயில் நிலையங்களும், லாபத்தில் இயங்கவில்லை.


சில நாட்களில், இந்த ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் நீண்ட தூர எக்ஸ் பிரஸ் ரயில்களில், ஒரு பயணி கூட ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், எக்ஸ்பிரஸ் ரயில் களை, இந்த நிலையங்களில் நிறுத்துவதை ரத்து செய்வது குறித்து, ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்டத்தில் மங்களூர் ஷாரனூர் இடையே ராஜதானி உட்பட பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இப்பாதை கொங்கன் ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment