Pages

Thursday, October 29, 2009

ஆயுட்கால சாதனை விருது

நவீன சிங்கப்பூரின் தந்தை என்று வர்ணிக்கப்படும் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ அமெரிக்காவில் மிகவும் சிறப்பான முறையில் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்.
இப்போது பத்து நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் எனப்படும் தென் கிழக்கு ஆசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சிறப்பான உறவுக்குப் பாடுபட்டதற்காகத் திரு லீக்கு ஆயுட்கால சாதனை விருது வழங்கப்பட்டது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று புதன்கிழமை காலையில் நடந்த அந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அரசியல், தொழில்துறை தலைவர்கள் திரளாக வருகை தந்திருந்தனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், ஜார்ஜ் புஷ் ஆகிய மூன்று அதிபர்களும் கடிதங்கள் மூலமாகவும் ஒலிப் பதிவுச் செய்தி மூலமாகவும் திரு லீயை வாழ்த்திப் பாராட்டினர்.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர்கள் டாக்டர் ஹென்றி கிஸிஞ்சர், டாக்டர் ஜார்ஜ் ஷூல்ட்ஸ் ஆகிய மூத்த தலைவர்கள் நேரடியாக நிகழ்ச்சிக்கு வருகை தந்து மதியுரை அமைச்சரை கௌரவித்தனர்.
அமெரிக்கா-ஆசியான் தொழில்துறை மன்றம் என்ற அமைப்பு தன்னுடைய 25வது ஆண்டு நிறைவையொட்டி ஆயுட்கால சாதனை விருதுக்கு ஏற்பாடு செய்தது.

அந்த விருதைப் பெற்ற முதல் தலைவர் திரு லீ என்பது குறிப்பிடத்தக்கது.
மண்டரின் ஓரியண்டல் ஓட்டலில் நடந்த அந்த விருது வழங்கும் விழாவில் சுமார் 450 பேர் மாலை நேர உடையில் எடுப்பாகவும் கலகலப்பாகவும் கலந்து கெண்டது குறிப்பிடத் தக்கதாக இருந்தது. மதியுரை அமைச்சர் அமெரிக்காவுக்கு 11 நாள் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

1 comment:

  1. உங்க தொண்டுக்கு வணக்கம் திரு . லீ .வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் .

    ReplyDelete