பிரிட்டோரியா : தென்னாப்ரிக்காவில் அமைந்துள்ள குலினான் சுரங்கத்தில் இருந்து உயர் தரமான வைரம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெட்ரா டயமண்ட் என்ற சுரங்கக் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
தென்னாப்ரிக்காவின் கவுடெங் மாகாணத்தின் பிரிட்டோரியா நகரத்தில் இருந்து 25 மைல் தொலைவில் அமைந்தள்ள குலினான் சுரங்கத்தில், கடந்த வாரம், பெரிய உயர் தரமான பட்டை தீட்டப்படாத வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த வைரம் 507 காரட் நிறை கொண்டது. கிட்டத்தட்ட 100 கிராம் எடை கொண்டது.இந்த வைரம் தனிச்சிறப்பான நிறம் மற்றும் தன்மை வாய்ந்தது என்பது ஆரம்ப கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, முதல் தர வகையைச் சேர்ந்த வைரமாக இருக்கலாம். இந்த வைரத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இது, உலகளவில் கண்டெடுக்கப்பட்ட பட்டை தீட்டப்படாத உயர் தர மிக்க 20 வைரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த வைரத்தை நிபுணர்கள் ஆய்வு செய்த பின்னரே, அது பற்றி கூடுதல் விவரங்கள் தெரிய வரும்.இதனுடன் 168 காரட், 58.50 காரட் மற்றும் 53.30 காரட் மதிப்பு வாய்ந்த மேலும் மூன்று வைரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
குலினான் சுரங்கத்தில் ஏற்கனவே மே மாதத்தில் கண்டெடுக்கப்பட்ட வைரம், ஹாங்காங்கில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.கடந்த 1905ம் ஆண்டு தான், ஒரிஜினல் குலினான் வைரம் கண்டெடுக்கப்பட்டது. அது, 3,106 காரட் மதிப்பு வாய்ந்தது. இந்த பட்டை தீட்டப்படாத வைரம், கடந்த 1905ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி, பிரடெரிக் வெல்ஸ் என்பவர் சுரங்கத்தில் தோண்டும் போது கிடைத்தது. பின், இந்த வைரத்தை ஒன்பது சிறிய வைரங்களாக வெட்டி, மன்னர் ஏழாம் எட்வர்டிடம் வழங்கப்பட்டது.கடந்த மே மாதம் குலினான் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை நீல வைரம், ஹாங்காங்கில் 31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
Tuesday, October 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment