ராஜரத்தினத்துக்கு இலங்கையில் உள்ள சொத்துகள் குறித்து விசாரணை நடத்திவருகிறோம். இதுவரை அவருக்கு ரூ.525 கோடி அளவுக்கு சொத்து இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பெற்ற மொத்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கை ராஜரத்தினம் கொடுத்துள்ளார் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்ததாக "டெய்லி மிரர்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் விடுதலைப் புலிகளுக்கு பணம் அளித்தார் என்பது நிரூபிக்க படவில்லை எனவும் நிரூபிக்கப்படாதவரை அவரது சொத்துகளை அரசு பறிமுதல் செய்யாது என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்ததாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment