Pages

Saturday, October 24, 2009

எனக்கு வாத்தியார் முதல்வர் கருணாநிதிதான்


எனக்கு வாத்தியார் முதல்வர் கருணாநிதிதான் என்று நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

என்னுடைய உலகத்தில் எனக்கு தெரிந்த உலகத்தில், நிஜ கலைஞர் நீங்கள்தான் (முதல்வர் கருணாநிதி). இதை மேடைக்காகச் சொல்லவில்லை. இது வாழ்க்கையின் நிஜம். நான் முதன் முதலில் சினிமா ஆசையில் பேசிக் காட்டிய வசனம் உங்களுடையது. ஆர்வத்தில் பேசியபோது அது எனக்குத் தெரியாது. அந்த வசனங்களால்தான் எனக்கு இந்த நடிகன் என்ற பதவி கிடைத்துள்ளது.

உங்களின் வசனங்களை மழலைக் குரலில் நான் பேசிக் காட்டியபோது நடிகர் திலகத்திடம் அழைத்துப் போய் இவன் கலைஞரின் வசனங்களை பேசிக் காட்டுகிறான் என்றார்கள். என்னை ஆச்சரியப் பார்வை பார்த்த அவர் ""கலைஞரின் வசனங்களைப் பேசுவது எனக்கே கஷ்டமாக இருக்கும், உன்னால் முடிந்தால் சொல்லிக் காட்டு'' என்றார். நானும் பேசிக் காட்டினேன்.

வசனங்களின் மீது ஆச்சரியத்தை வீசி விட்டு என்னை தன் மடியில் ஏறி உட்கார வைத்துக் கொண்டார். அவரின் மடியில் அமர வாய்ப்பு வழங்கியது உங்கள் வசனம். அதன் பிறகுதான் தெரிந்தது அவர் அரங்கேறியதே உங்கள் வசனத்தால் என்று.

சிறு பருவத்தில் இருந்தே என் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து இருக்கிறீர்கள். அதை இந்த மேடையில் சொல்லி பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

வீட்டுக்கு அழைத்து கமல் நீ, "பத்மஸ்ரீ' என்கிறீர்கள். அதன் பிறகு ஒரு நாள் அழைத்து நீ "கலைஞானி' என்கிறீர்கள். அவற்றுக்கெல்லாம் தலையாட்டிக் கொள்கிறேன். இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் எனக்கு மார்க் வழங்கி வாத்தியாராக இருந்துள்ளீர்கள். அதே போல் எனக்கு ஒரு புகழ் சேரும்போது புளங்காகிதம் அடைந்துள்ளீர்கள்.

நீங்கள் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் காயாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். என் பட்டமே நீங்கள்தான். எங்கள் பட்டமும் நீங்கள் தான்.

இன்னும் பல அரங்குகள் உங்களுக்காக காத்திருக்கிறது. அந்த அரங்குகளில் எல்லாம் பாராட்டுபவர்களுக்கு வழி விட்டு பார்வையாளனாக அமர மட்டுமே எனக்கு அருகதை இருக்கிறது'' என்று நெகிழ்ந்தார் கமல்ஹாசன்.

1 comment:

  1. Mr.Kamal dont act on stage. CM knows very well that you cinewalas do if he is not in power.Dont cheat with your cinematic dialougues.

    ReplyDelete