Pages

Saturday, December 31, 2011

இந்திய மாணவர் கொலை.......


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள க்வான்ட்லென் பல்கலைக் கழகத்தில், மேலாண்மைத் துறையில் இந்தியாவைச் சேர்ந்த , 27, என்ற மாணவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். சர்ரே நகரில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர்கள் கிறிஸ்துமசை கொண்டாடுவதற்காக, இவரை, அன்று மதிய நேரப் பணியில் இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். குப்தாவும் அன்று மதிய நேரம் முதல் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து, குப்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டார். இதையடுத்து, அருகில் உள்ளவர்கள், குப்தாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எனினும் குப்தா இறந்து விட்டார். இதுகுறித்து, சர்ரே நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கொலையாளி கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, குப்தா குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு


அமெரிக்க இந்தியரும், வேதியியல் பிரிவில் நோபல் பரிசு பெற்றவருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் அரசு "நைட்ஹூட்' விருது அறிவித்துள்ளது. பிரிட்டனின் மிக உயர்ந்த விருதுகளுள் ஒன்று, "நைட்ஹூட்'. சில சாதனைகள் மற்றும் சேவைகளுக்காக வழங்கப்படும் இந்த விருது, மிக மிக அரிதான சந்தர்ப்பத்தில் மட்டுமே, வெளிநாட்டினருக்கு வழங்கப்படும். பொதுவாக, பிரிட்டனின் நீதிபதிகள் மற்றும் குடிமை அதிகாரிகள் தான், இந்த விருதினைப் பெறுவது வழக்கம். கடந்த 2009ல், வேதியியல் பிரிவில், மூலக்கூறு உயிரியலில் அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றார்.

இந்நிலையில், பிரிட்டன் அரசு, 2012ம் ஆண்டுக்கான புத்தாண்டு கவுரவ விருது பெறுவோர் பட்டியலை, நேற்று வெளியிட்டது. அதில், மூலக்கூறு உயிரியலில் குறிப்பிடத்தக்க சேவைகளைப் புரிந்துள்ளதால், ராமகிருஷ்ணனுக்கு, பிரிட்டனின் உயர்விருதான "நைட்ஹூட்' விருது வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இவர், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் பிரிவில், மருத்துவ ஆய்வகத்தில் உயர் பதவியில் உள்ளார். இதுகுறித்து, ராமகிருஷ்ணன் கூறுகையில், "பிரிட்டனில் வெளிநாட்டவர் குடியேறுவதைப் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில், பிரிட்டன் சமூகத்திற்கு, வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் குடியேறியவர்கள், அதிகளவில் பங்களிப்பு செய்துள்ளனர் என்பது, இந்த விருதின் மூலம் நிரூபணமாகியுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலையின் மூலக்கூறு உயிரியல் மருத்துவ ஆய்வகத்தை நிறுவியர்களில் பலர், வெளிநாட்டில் இருந்து பிரிட்டனில் குடியேறியோர் தான்' என்றார். "நைட்ஹூட்' விருது பெற்றவர்களின் பெயருக்கு முன்னால்,"சர்' பட்டம் சேர்க்கப்பட்டு அழைக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராமகிருஷ்ணன் தவிர்த்து, ரஷ்யாவைச் சேர்ந்தோரும், தற்போது பிரிட்டனில் வசிப்போருமான, பேராசிரியர்கள் ஆண்டர் ஜெய்ம் மற்றும் கான்ஸ்டான்டின் நோவோஸ்லெவ் ஆகிய இருவருக்கும், இந்த "நைட்ஹூட்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, இந்தியர்கள் பலருக்கு பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Who is the highest-earning female musician?


It shouldn't come as a surprise. She not only rules the charts and award shows, but also reigns supreme when it comes to bringing in the most dough.

We are talking about Lady Gaga, who is rated the top-earning female musician by Forbes magazine. For your information, between May 2010 and May 2011, Mother Monster raked in a staggering $90 million. That's two times what country music darling Taylor Swift, who holds the second place, earned in the past year.

Most of Gaga's paychecks come from her concert sales. Forbes estimated that she takes in $1.3 million nightly gross while on tour. On top of that, her second studio album Born This Way, released in May, as well as lucrative endorsement deals with the likes of Polaroid and Virgin Mobile, help fatten up her purse, too.


Lady Gaga is the top-earning female musician in the past year.

Meanwhile, Swift, who just turned 22 two days ago, towers over the rest of her contemporaries - except Gaga - with an income of $45 million, with most of it coming from her tour (which brings in an estimated $1 million a night) and the sales of her last album, 2010's Speak Now.

Pop royalties like Katy Perry and Beyonce did not fare too badly either. Perry, 27, comes in at the third place with an earning of $44 million, while Beyonce follows behind with $35 million - less than what she usually raked in, however, according to the magazine.

Other singers making to the top ten list are Rihanna ($29 million), Pink ($22 million), Carrie Underwood ($20 million), Celine Dion ($19 million, the bulk of it coming from her Vegas show, with her being paid $2.3 million every night), Adele ($18 million).

Sharing the tenth place are pop princess Britney Spears ($10 million) and R&B star Alicia Keys ($10 million).

He was killed in train accident but he still could be sued…


He was killed in train accident but he still could be sued…

A teenager who was killed by a train in 2008, can be held responsible for the injuries that his flying body parts caused a woman, an American court has ruled.

Hiroyuki Joho, 18, was running to a train in the pouring rain with an umbrella when he was struck by a train travelling at more than 70mph (112kmh).

A large portion of his body flew about 30 metres on to the southbound platform, striking Gayane Zokhrabov, then 58.

She was knocked to the ground, and broke her leg and wrist and injured her shoulder.

A Cook Country judge dismissed Zokhrabov's lawsuit on the grounds Joho could not have anticipated the injuries his flying body parts would have caused.

But, the appeal court disagreed. It argued "it was reasonably foreseeable" the train would kill the teen and fling his body towards waiting passengers.

Leslie Rosen handled Zokhrabov's appeal and said while the case was "very peculiar and gory and creepy" it was straightforward negligence.

"If you do something as stupid as this guy did you have to be responsible for what comes from it."

Friday, December 30, 2011

நடிகை ஹன்சிகா


நடிகை ஹன்சிகா ஒரு தொழில் அதிபரிடம் சிக்கி கொள்ள இருந்தார். தோழிகள் அவரை பற்றி சொல்ல உஷார் ஆகி விட்டாராம்.

நல்ல நாகரீகம் ....


நல்ல நாகரீகம் ....எப்போதும் எதற்கும் தயார் எனும் சிங்கப்பூர் சிறுசுகள்.எதாவது ப்ரோப்ளம் என்றால் ஓட முடியுமா ?

நடிகை லக்ஷ்மிராய் - இது வரை அவருக்கு வராத காதல்


நடிகை லக்ஷ்மிராய் , உயரமான வெள்ளை நடிகை. இது வரை அவருக்கு வராத காதல் இப்போது புதியதாய் முளைத்திருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லைங்கோ. நம்ம டான்ஸ் மாஸ்டர்தான். " அவர் எதுவா இருந்தாலும் நல்ல விளங்கரா மாதிரி சொல்லித் தனது செய்யறார் " என்றாராம் தோழிகளிடம். நடிப்பை பற்றி தான் சொல்லியிருப்பார் என்று நம்புவோம் ?

இவர் ஏற்கனவே ஒரு மலையாள நடிகரிடம் ரொம்பவும் பாசத்தில் இருந்தாராம்.இவரிடம் தெரிய வேண்டியதை எல்லாம் தெரிந்து கொண்ட அவர் பின் கழட்டி விட்டாராம்.

சங்கீத சாம்ராட் இளையராஜா .........


சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஜெயா டி.வி., சார்பில் 6 வருடங்களுக்கு பிறகு 'என்றென்றும் ராஜா 'என்ற தலைப்பில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நடந்தது. நடந்த இந்த இசைக்கச்சேரியில் பிரபல பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.‌யேசுதாஸ், பால முரளிகிருஷ்ணா, சித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சரியாக 6மணிக்கு வெளிநாட்டு இசை கலைஞர்களின் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பிறகு இளையராஜா மேடையில் தோன்றிய போது ரசிகர்களின் கரகோஷம் ஸ்டேடியத்தை அதிர செய்தது.

முதல் பாடலாக 'ஜனனி ஜனனி..' பாடலை பாடினார் இளையராஜா.

அதனைத்தொடர்ந்து யேசுதாஸ் பேசும்போது, "நாங்கள் எல்லாரும் சின்ன வயசில் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்போது இந்த ‌இசை தான் எங்களை காப்பாற்றியது " என்று உருக்கமாக கூறினார். பின்னர் தன்னுடைய இனிமையான குரலில்' பூவே செம்பூவே' பாடலை பாடியதோடு, இந்த பாடல் தனக்கு ரொம்ப பிடித்த பாடல் என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி., மறைந்த இளையராஜாவின் மனைவி ஜீவாவுக்கு சமர்ப்பணமாக நானாக நானில்லை பாடலை பாடி அசத்தினார். அவர் பேசுகையில் 'நானும், ராஜாவும் வேறு வேறு இல்லை. இருவருமே ஒன்று தான்' என்றார்.

தொடர்ந்து டைரக்டர் மகேந்திரன் படத்தில் இடம்பெற்ற பாடலை, பாலு பாடி அந்த பாடல் எப்படி உருவானது என்பதையும் மேடையில் விளக்கி அசத்தினார். நிகழ்ச்சியின் இடையே நடிகர் கமல்ஹாசன், இளையராஜாவை வாழ்த்து பேசிய வீடியோ காட்சி ஒளிப்பரப்பட்டது. நிகழ்ச்சியின் ஹைலைட்டாக பிரபல பின்னணி பாடகர் பால முரளி கிருஷ்ணா மேடையில் ‌தோன்றி, பாலுவுடன் சேர்ந்து சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற பாடலை பாடினார். அவரைத்தொடர்ந்து இளையராஜாவின் வாரிசுகள் யுவன், பவதாரணி ஆகியோரும், பிரபல பின்னணி பாடகர்கள் சித்ரா, ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் பாடி அசத்தினர்.

இசை நிகழ்ச்சிகளுடன் அவ்வப்போது பல சுவாரஸ்யமான தகவல்களையும் இளையராஜா பகிர்ந்து கொண்டார். கவிஞர் கண்ணாதசன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை கூறிய ராஜா, " இந்த உலகத்திலேயே கவிஞர் கண்ணதாசன் போல இன்ஸ்டன்ட் கவிஞர் யாரும் இல்லை. நான் நிறைய பேர் கூட வேலை பார்த்து இருக்கேன். ஆனால் கண்ணாதாசன் அவர்கள் கூட வேலை பார்த்தது சுவாரசியமான அனுபவம். ஒருமுறை ஸ்டுடியோவில் பாட்டு எழுத வந்தார் கண்ணதாசன். நான் டியூன் போட்டு காட்டினேன். தூ என துப்பினார். ஐயோ இவர் இசையை கேட்டு துப்பினாரா அல்லது கதையை கேட்டு துப்பினாரா என்று புரியல. பிறகு இசையை கேட்டு அப்படியே வரிகளை சொல்ல ஆரம்பிச்சார், அந்த பாட்டு தான் ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்... என்ற பாட்டு. அதில் தான் மலேசியா வாசுதேவன் அறிமுகமானார் " என்றார்.

இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களுடன் ஷோபா, விஜய் அண்டனி, ஜேம்ஸ் வசந்தன், தரன், தேவிஸ்ரீ பிரசாத், சரண்யா, ஜெய சித்ரா, பாலு மகேந்திர போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டனர். கொலவெறிக்கு இசை அமைத்த அனிருத் இடம் கிடைக்காமல் நின்றபடியே இசை நிகழ்ச்சியை ரசித்து பார்த்தார். இரவு 12 மணி வரை நீடித்த இளையராஜாவின் என்றென்றும் ராஜா நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமைந்தது.

இது எங்கே எடுத்தப் படம் ?

Thursday, December 29, 2011

Is it a true shoot ?

A 99-year-old Italian man wants a divorce

A 99-year-old Italian man wants a divorce after recently discovering his wife had an affair, some 70 years ago.

The Daily Telegraph reported Antonio C found love letters from his wife to her ex-lover in an old chest of drawers.

He immediately confronted his wife of 77 years, Rosa C.

He demanded a divorce despite being together nearly eight decades, having five children, a dozen grandchildren and one great-grand child..

Rosa confessed everything but still could not save the marriage.

However, the marriage was already fragile - Antonio briefly left their house for a few weeks, 10 years ago.

The case appears to set a new record - the previous oldest couple to divorce were Bertie and Jessie Wood, both aged 98, from the United Kingdom.

குறி


காளையார்கோவில் : குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, காளையார்கோவிலில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து,36. இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார்.

சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா,45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக, சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம், "என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள்' எனக் கேட்டுள்ளார்."உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன்' என, சாமியார் கூறியுள்ளார்.

இதை நம்பி முத்தையா , அவரின் மனைவி அழகம்மாளை,30, சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த, 27ம் தேதி இரவு, 9 மணிக்கு சாமியார், அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்து, கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு, தட்டிக்கேட்ட முத்தையாவை, சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; போலி சாமியார் மாரிமுத்துவை கைது செய்தனர்.