Pages

Thursday, December 29, 2011

குறி


காளையார்கோவில் : குறி சொல்வதாகக் கூறி, பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, காளையார்கோவிலில் போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள திருவேங்கடத்தை சேர்ந்த கருப்பையா மகன் மாரிமுத்து,36. இவர், காளையார்கோவிலில் வசிக்கிறார். ஊத்துப்பட்டியில், கருப்புசாமி கோவில் கட்டி, குறி சொல்லி வந்தார்.

சிறுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா,45; கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த ஒரு வாரமாக, சாமியார் வீட்டில் வேலை பார்த்து வந்தார். சாமியாரிடம், "என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு செல்ல சம்பளம் தாருங்கள்' எனக் கேட்டுள்ளார்."உன் மனைவியை என்னிடம் அழைத்து வந்தால், குறி பார்த்து நோயை சரி செய்து விடுகிறேன்' என, சாமியார் கூறியுள்ளார்.

இதை நம்பி முத்தையா , அவரின் மனைவி அழகம்மாளை,30, சாமியார் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த, 27ம் தேதி இரவு, 9 மணிக்கு சாமியார், அழகம்மாளை தனி அறைக்குள் அழைத்து சென்று, பலாத்காரம் செய்து, கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க செயினை பறித்துள்ளார். மனைவியின் சத்தம் கேட்டு, தட்டிக்கேட்ட முத்தையாவை, சாமியார் அரிவாளால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால், இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, அழகம்மாளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்; போலி சாமியார் மாரிமுத்துவை கைது செய்தனர்.

No comments:

Post a Comment