
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள க்வான்ட்லென் பல்கலைக் கழகத்தில், மேலாண்மைத் துறையில் இந்தியாவைச் சேர்ந்த , 27, என்ற மாணவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். சர்ரே நகரில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர்கள் கிறிஸ்துமசை கொண்டாடுவதற்காக, இவரை, அன்று மதிய நேரப் பணியில் இருக்கும்படி கேட்டுக் கொண்டனர். குப்தாவும் அன்று மதிய நேரம் முதல் கடையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து, குப்தாவை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிவிட்டார். இதையடுத்து, அருகில் உள்ளவர்கள், குப்தாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எனினும் குப்தா இறந்து விட்டார். இதுகுறித்து, சர்ரே நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்தாவின் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. கொலையாளி கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என, குப்தா குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment