Pages

Tuesday, September 29, 2009

சாவி பெயரினை சொல்லி பிழைப்பு நடத்துவவர்கள்

முருகன் , சிவகாசி .
உண்மையிலே ஆசிரியர் சாவியால் உருவானவர்கள் யார் ?

சாவிக்காக அதிகம் உழைத்தவர்கள் அச்சு கோர்த்த ராஜபாதர் , ஓவியர் ஜெயராஜ் .அவரது சொந்த காரர்கள் மோகன் { தற்பொழுது தினமணியில் இருக்கிறார் } ராஜேந்திரன் {இப்பொழுது தினமலரில் இருக்கிறார் } இவரை போல தலைப்பு கையால் அழகாய் எழுத வேறு யாரும் இல்லை. ரிசர்வ் பேங்க் ராணிமைந்தன் , டி .எஸ்.ரமேஷ் { இப்பொழுது ஆங்கில பத்திரிகை ஒன்றில் புகைபடகரராக இருக்கிறார்.அப்புறம் சுப்ரஜா.பாரிவள்ளல்.வைத்யநாதன்.குமுதம் பத்திரிகையிலும் குங்குமம் பத்திரிகையிலும் வாரா வாரம் எழுதி வந்த என்னை பல புனை பெயர்களில் எழுத வைத்து பத்திரிக்கை பற்றி அனைத்தையும் சொல்லி தந்தவர் சாவி.இன்றுஅவரிடம் இருந்தேன் என்று யார் யாரோ சாவி பெயரினை சொல்லி பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.ஒருவரை மறந்து விட்டேன்.சம்பத் . இவர் சிறுகதைகள் நிறைய எழுதுவார் .நன்றாக ப்ரூப் பார்ப்பார்.{தற்பொழுது நக்கீரன் வாரம் இருமுறையில் இருக்கிறார்.

சந்தர்ப்பவாதி சேகர்

சிவமதி , மயிலாப்பூர் , சென்னை .

எஸ் .வீ .சேகர் தி .மு .காவில் சேர போகிறாரா ?

சந்தர்பவாதி எஸ் . வீ. சேகர் என்ன வேண்டுமானாலும் செய்வார்.தலைவருக்கு இவ்வர்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று நன்றகாவே தெரியும் .
கவிதா பாரதி , மலேசியா .

நடிகர் சரத்குமார் மீண்டும் தி .மு .காவில் இணைய போகிறார் போலிருக்கிறது ?

இந்த சூழ் நிலையில் என்ன செய்வது பாவம் பிழைப்பு நடக்க வேண்டும் அல்லவா ?

enkey mutham idalaam

கண்ணதாசன் , சென்னை .

காதலியை எங்கே முத்தம் இடலாம் ?

கண்ணதாசன் பெயரை வைத்து கொண்டு இப்படி ஒரு கேள்வியா ?

யாரும் இல்லாத இடத்தில முத்தம் இட வேண்டும்,
ஸ்ரீப்ரியா , நெய்வேலி .

பணத்திற்கு என்ன செய்ய வேண்டும் ?

உழைக்க வேண்டும் .

Monday, September 28, 2009

nadigar vijayakanth



வடசேரி கண்ணன் , கேரளா .

நடிகர் விஜயகாந்த் உண்ணா விரதம் ?
அரசியல்ல இந்த நாடகம் எல்லாம் சகஜம்பா

பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவரா விவேக் ?




நளினி சிவராமன் , சிங்கப்பூர்


பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவரா விவேக் ?


மிகச் சிறந்த நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே மற்றும் நாகேஷுக்கே வழங்கப்படாத பத்மஸ்ரீ விருது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே… படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் அதிகம் பேசும் நீங்கள் இதற்குத் தகுதியானவர்தானா?’, என விவேக்கிடம் கேள்வி எழுப்பியதால் கடுப்பானார் விவேக்.
டெல்லியி்ல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பிய நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அவரது ரசிகர்கள் மூலம் மிகப் பெரிய வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று சில நிருபர்களைச் சந்தித்து தனது பத்மஸ்ரீ அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
தமிழின் உன்னதமான நகைச்சுவைக் கலைஞர்களான என்எஸ்கே, நாகேஷ் போன்றவர்களுக்குக் கூட கிடைக்காத பத்மஸ்ரீ விருது உங்களுக்குக் கிடைத்துள்ளது. படத்துக்குப் படம் ஆபாச வசனங்கள் பேசும் நீங்கள் இந்த விருதுக்குத் தகுதியானவர்தானா என்று கேட்டதற்கு, “என்எஸ் கிருஷ்ணன் காலத்தில் பத்மஸ்ரீ வி்ருது வழங்கப்படவில்லை. நாகேஷ் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு விருது கொடுக்காதது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை”, என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:
“27 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன். பல சமூக சீர்திருத்த கருத்துக்களைக் கூறி வந்திருக்கிறேன். குடும்பநல திட்டம், பெண் சிசு கொலை, குழந்தைகள் கல்வி, வரதட்சணை ஒழிப்பு, போலியோ மருந்தின் அவசியம், போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகிய கருத்துக்களை நான் நடித்த படங்களின் மூலம் சொல்லியிருக்கிறேன்.
படத்தில் நாத்திகம் பேசினாலும் நான் ஒரு ஆன்மிகவாதி. கண்டிப்பாக நாத்திகன் அல்ல. ஆன்மிகத்தில் உள்ள சில மூடப்பழக்க வழக்கங்களை படங்களில் எடுத்து சொல்கிறேன், அவ்வளவுதான். என் கருத்துக்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்லத்தான் இப்போது கதாநாயகனாக நடிக்க விரும்புகிறேன்.
நான் சாமியாராகப் போவதாக சிலர் கேட்டிருந்தார்கள். நிச்சயமாக நான் சாமியார் ஆகமாட்டேன். எல்லோருடைய வாழ்க்கையிலும் உண்மை என ஒன்று இருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாழ்ந்து முடித்த பின், பெரும் உண்மையை தேடி போகவேண்டும் என்ற ஆசை சிலருக்கு ஏற்படுவது உண்டு. அது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சாமியார் ஆகவேண்டும் என்ற அவசியமில்லை…”, என்றார்.
வடிவேலுவின் நகைச்சுவை மாதிரி சுவாரஸ்யமாக உங்கள் நடிப்பு இல்லையே… திரும்ப திரும்ப ஒரே மாதிரிதானே நடிக்கிறீர்கள். படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறீர்கள், என்று கேட்டபோது கடுப்பான விவேக், “சில பிரசாரங்கள் ‘போர்’ அடிக்கத்தான் செய்யும். கசப்பு மருந்துக்குள் இனிப்பு கலப்பதைபோல் சொல்லவேண்டும். சுருளிராஜனின் நகைச்சுவையைகூட விமர்சித்தவர்கள் இருக்கிறார்கள். இன்னொருவரின் பெயரை சொன்னீர்களே அவரைப்போல் நான் ஏன் நடிக்க வேண்டும்?”, என்றார் காட்டமாக.



மேலே உள்ளதை படித்தீர்கள் அல்லவா ? இப்போது கிழே உள்ளதையும் படியுங்கள்.அவர் செய்த தொண்டு உங்களுக்கே புரியும்.

Please read the following matters . Then you decide.

News : `I want to act as hero, so that I could give useful social messages’ Actor Padmasri Vivek in Daily Thanthi of April 18, 2009.

Views : Some of his social messages through cinema are appended and trust he will be giving more such messages as hero: (updated Sept.19,09)

* Looking at his father sleeping on the family Sofa, he asks his mother who kept the buffalo in the drawing room.

* He tells his father that the body odour from the father reminds him of a `rotten rat'.

* When his father tells him all unused articles like clothes, broken furniture etc to be burnt on the Bhogi day, he brings in his grand father and suggest that he too could be burnt since he was a useless article.

* He advises his mother not to eat pulses to reduce farting.

* He praises his elder sister for her generosity, eulogieses their umblical cord relationship etc; when the sister tells him he is a wastrel, and get away, he curses her in slum language , addressing her `Podi' (disrespecful word not used in average families -- but a good social message!).

* To impress a European girl in an Indian library, he addresses the dark skinned Librarian as `Blackie' and asks him the availability of a book.

* He smells a corpse, taken aback by stench and comments it started rotting. (Incidentally defiling a dead body is a criminal offence too.His motive seems to be that family members should wrinkle their nose in disgust - whether it is frequent allusions to sex or human anatomy)

* He is dancing with a woman. Suddenly he spots a lice on her hair, grabs and crush it between his nails, and smiles in to the camera. (Suggested social messages for him - smell the mouth or ear or other parts according to his taste, of his dancing partner and crack `jokes' like he did after smelling the dead body)

* After getting his friends in to trouble with police or public, he would run away shouting `escape’.

* He pretends to be the child of a young parents, eats away the food kept for the child and steals some money from the house which provided him food.

* He asks hot water to a slum woman who takes pity on him and provides him with ordinary water to wash off the filth and mud on his body.

* Vomit, Urine, farting and shit are his favorite `social message’ themes with special reference to genitals.

* A pretty woman is about to eat `Paniyaram' . Vivek warns her that is she ate it, she will contract diahorrea, and something will come out `bursting through' her. Even as she contines to eat ignoring his `social message', he says he feel like vomitting on seeing the way she gobbles up `Paniyaram'.

Vivek allots parallel berths to a young man and woman in the sleeper coach of a night train.. He tutors the man how to propose his love to the woman during the night by creeping in to her bed. The man squeals in delight. Hearing the sound, Vivek wants to know if the man is suffering from `gas trouble’.

* A frightened Vivek is passing urine which flows through his leg, while confronting an Andhra rowdy. But Vivek gives a good social message by pouring cold water on his head to conceal it.

* He passes urine in to an empty bottle while travelling in an open jeep and pass it on to a traffic cop who chases the jeep, to drink.

* He falls off on the road from a two wheeler, and another lady driven two wheeler rans over him.....no mark for guessing.. it ran over his anatomy below the naval and above the knee.

* A person explains to Vivek that the `Nattama' has a feminine voice after a spherical tumor was removed from the lower part of his stomach. Vivek wants to know only one `ball or two balls were removed"

* A police inspector shoots him from the rear, and blood spurts from the center of both his buttocks, turning his white dhoti in to red. Showing this social message in close up, he asks the inspector why he could not shoot forest brigand Veerappan like that.

* He causes a man, afflicted with piles to be dragged on the road, suspended from a cross bar, making the buttocks to hit the road. Then the `social message' is given by showing the blood oozing buttocks in close up on screen.

* He creates tamasha by drimking coco cola from a cricket loin guard and writhes in pain when the cricket ball hits...you know where!

* He punishes a rapist by shooting at his crotch; but the `social message is not effective since the bleeding organ is not shown in close up, as usually done.

* He looks at an elderly servant woman talking to a CBI Officer and quips that `a bad smell is coming from a particular part of her body'.

*He throws knife at an enemy, but misses target and hits a middle aged sweeper women - yes. you guessed it right...at the fleshy higher end of her leg.

* At a party, he voimits all over his shirt, shows it on close up for the `social benefit' and then wipes the vomit with his neck-tie `joking' that his shirt comes with an attached napkin!

* He is about to eat a `Pizza', and gives the social messages to his fellow diners that the first letter of the item reminds him something in Tamil. (Usually, people pray before eating their food, but no social message in it)

* To impress a group of women, he tells a Safaiwallah in a loud voice that if all of them did not use the toilet regularly, the Safaiwallah will lose his job!

* A group of youngsters are on picnic and a girl request the driver Vivek to stop. He wants to know if the girl wanted to urinate.

* Vivek is a holy person and a male devotee asks for blessing. A jet of water goes towards him and the devotee says it tastes saltish. Vivek discloses the social messasge. It is his urine!

* He pretends to vomit in to the dining table of posh restaurants so that the customer will move away and he could sit here * He eats with friends in a posh restaurant. When the bills comes, he takes out a visiting card, keeps it inside the bill folder, saying it is a credit card. While the bearer goes to the cashier, all the friends run away laughing and shouting `escape' (nice social message)

* He asks a man, enjoying food in a roadside teashop as to why he chose to eat the food in which a cocoroach had fallen, making him thow up in the hotel. (Some one can try this social message during wedding lunch or at birthday parties given by film stars)

* He froths in the mouth while pulling a loaded cart, and describes the froth as `Lassi'. An elementary lesson we were taught was never equate food (a God's gift) with anything revolting. May be it is ok in the name of social message.

* He spits into his hands and dishevels his friends hair to make him unattractive to a young woman

If his intention is to correct society with such presentations, he could give more powerful messages by showing a teenager raping a much younger girl, incest, perverted relationships etc. If the viewer wrinkles his nose, the message has reached the target.

மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு


கந்தசாமி , மதுரை .
வடிவேல் விவேக்கின் மார்கெட்டை காலி பண்ணிட்டாரா ?

சமீபகாலமாக விவேக்கிற்கும் வடிவேலுக்கும் பனிப்போர் நடந்த வண்ணமே உள்ளது. இதுவரை சில படங்களில் விவேக் கழட்டிவிடப்பட்டு, வடிவேலுவை உள்ளே கொண்டுவந்துள்ளனர். அதே இன்னும் சிலர் வடிவேல் கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் விவேக்-ஐ உள்ளே இழுத்துப்போட்டுள்ளனர். சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் படம் 'கந்தசாமி'. இதில் முதலில் புக் ஆனவர் விவேக். ஆனால் என்ன நடந்ததோ திடீரெனக் கழட்டி விடப்பட்டு, வடிவேலு-வை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வடிவேலுக்குக் கிடைத்த அடுத்த பெரிய படம் 'ஆதவன்'. இதனைத் தாயாரிப்பவர் யார் தெரியுமா? குருவி தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின். இந்தப் படத்திலும் காமெடிக்காட்சிகளுக்கு புக் ஆகி இருந்தவர் விவேக். ஆனால் இதிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.

எது எப்படியோ? சின்னக் கலைவாணர் விவேக்-குக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சதுக்கப்பறம் அவரு பக்கம் ஏனோ வெப்பக்காத்து அடிக்குது...அம்புட்டுத்தேண்ணே!

பத்மஸ்ரீ விருது வாங்கியுள்ளாரே ?

காளிதாசன் , நியூ யார்க் .நடிகர் விவேக் பத்மஸ்ரீ அவரது வாங்கியுள்ளாரே ?

உங்கள் கேள்வியினை திரும்ப படிக்கவும் .

Saturday, September 26, 2009

shopping mallil tasmak

ஷாப்பிங் மாலில் டாஸ்மாக் பார் .சென்னை ஸ்பென்செர் முதல் கட்டடத்தில் டாஸ்மாக் பார் இருக்கிறது.பல தட்டு மக்களும் வெளி நாட்டு டூரிஸ்டுகள் வந்து போகும் இங்கே பதினைந்து வயது பசங்கள் கும்பல் கும்பலாக வந்து குடித்து விட்டு அலம்பல் செய்வது .போகும் வரும் இளம் பெண்களை கிண்டல் கேலி செய்வது .கையை பிடித்து இழுப்பது என ஒரே ரகளையாம். கடை உரிமையாளர்கள் உண்ணாவிரதம் இருந்து சென்னை மாநகர தலைமை ஆணையரிடம் கம்ப்ளைன்ட் கொடுத்ததும் ஒரு பிரயோஜனமும் இல்லை.பாவம் கடைகாரர்கள். லட்ச கணக்கில் பண்ணதை போட்டு வயிறில் நெருப்பை கட்டி கொண்டு உட்கர்ந்திருக்கிறார்கள்.

super coffee kadai

ராகவேந்தரா காபி கடை

சென்னை ஸ்பென்செர் முதல் கட்டடத்தில் பல வருடங்களாக இயங்கி வரும் கடைக்கு காபி சாப்பிட போனேன்.இரண்டு வருடம் முன்னால் சாப்பிட அதே ருசி. வெளி நாட்டுகாரர்கள் இரண்டு மூன்று கப் குடிப்பது பார்க்க சந்தோஷமாய் இருக்கிறது . பெஸ்ட் பில்டர் காபி என்கிற சர்டிபிகேட் வேறு.

ஒரு முறை போய் ருசியுங்கள்.

Thursday, September 24, 2009

முன்னாள் நடிகை ஜோதிகா


ஒரு முறை தனக்கு விவேக்கினை பிடிக்கும் என்று சொன்னார். அவர் குறிபிட்டது விவேக் ஒபரோய் அவர்களை . அதை தன்னைத்தான் சொன்னதாக குமுதம் பத்திரிக்கைக்கு சொல்லி மூக்கு உடை பட்டாராம் விவேக்.


சூப்பர் ஜோக்.

Wednesday, September 23, 2009

நடிகர் விவேக் மனைவி மீது போலீசில் புகார்

வீட்டை காலி செய்யும்படி ரவுடிகளுடன் வந்து மிரட்டுவதாக சிரிப்பு நடிகர் விவேக்கின் மனைவி மீது எழுத்தாளர் சுப்ரஜா போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் அவர் அளித்துள்ள புகாரில்,

நான் சினிமா நடிகர் விவேக் வீட்டில் கடந்த 4 1/2 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். வீட்டை காலி செய்யும்படி கடந்த மார்ச் மாதம் விவேக் சில ரவுடிகளுடன் வந்து என்னை மிரட்டினார். இதுகுறித்து நான் ஏற்கனவே கொடுத்த புகார் மீது விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் 11 ந் தேதி (நேற்று) நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு விவேக்கின் மனைவி அருள்செல்வி, வக்கீல் மற்றும் சில முகம் தெரியாத ரவுடிகள் வந்து எனது மகனை பிடித்து வெளியே தள்ளினர். பின்னர் வீட்டுக்குள் நுழைந்து புகைப்படங்கள் எடுத்தனர்.

இதுகுறித்து எனது மகன் என்னிடம் போன் மூலம் தகவல் கூறினான். நான் உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன். நான் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் நுழைந்து ரவுடித்தனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை கே.கே.நகர் போலீசார் பதிவு செய்துள்ளனர்.



:

:







கருத்துக்கள்(5)
Name : ANKAYATPIRIYAN Date :4/13/2009 3:35:53 AM
விவேக் சீர்திருத்தவாதி என்று நினைத்தேன்.எல்லாமே சினிமாதானா.விவேக் commediya Roughdiya
Name : hilmee {well come to sri lanka} Date :4/13/2009 12:51:53 AM
விவேக் சார் இந்த ஜாக் எந்த படத்துல வருதுங்கே
Name : vijayan Date :4/12/2009 8:52:41 PM
நிஜ வாழ்கையில் சிலர் இப்படி தான் இருகிறார்கள் . ஊருக்கு தான் உபதேசம் . என்ன பணமும் செல்வாக்கும் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செயலாம் என்று நினைகிறார்கள் . வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் இருப்பான் என்பதை மறந்து விடுகிறார்கள் .
Name : jesfer-sri lanka Date :4/12/2009 11:12:04 AM
விவேக் சார், இது காமெடியா அல்லது உண்மையா?
Name : Moothy Date :4/12/2009 11:03:16 AM
why he is not vacating the house, After 2 month notice he has to vacate. Otherwise the house owner will user musle power, nothing wrong in that. How police accepting complaint? Can a pick-packet lodge a complaint against people?.

short stories

நானும் கடவுளும்!

(சிறுகதை)

- சுப்ரஜா

அறுபத்தொன்பது தூக்க மாத்திரைகள், பையன், மனை விக்கு கொடுக்க வைத்திருந்த மன அழுத்த மாத்திரைகள் என, எண்பதுக்கும் மேல் வாயில் மொத்தம், மொத்தமாய் போட்டு தண்ணீர் குடித்து விழுங்கினேன்.


கண்களை மெல்ல மூடினேன்... யாரோ தட்டி எழுப்ப எழுந்தேன்...


எதிரே வெள்ளை நிற உடையில் தீட்சண்ய பார்வையுடன் இருந்தவர், ""எழுந்து உட்கார்,'' என்றார்.


உட்கார்ந்தேன்.

""யார் நீங்கள்?''

""நான் கடவுள்...'' தங்கப் பற்கள் தெரிய சிரித்தார்.

""நான் எப்படி நம்புவது?''

""உன்னை சாவின் விளிம்பிலிருந்து மீட்டு உட்கார வைத் திருக்கிறேன். நீ சாப்பிட்ட மாத்திரைகளுக்கு நீ எப் பொழுதோ இறந்திருக்க வேண்டும். உன் கூட்டிலிருந்து ஆவி வெளியேறி இருக்கும். எதற்காக இந்த முயற்சி?''

""நான் நினைத்த எதுவும் நடக்கவில்லை. வீட்டின் சூழல் சரியில்லை. நண்பர்கள் ஓரிருவரை தவிர யாரும் இல்லை. என்னிடம் பணம் இல்லையென் றால், யாரும் நம்ப மறுக்கின்றனர். நான் பொய் சொல்கிறேன் என்கின்றனர்...

""என்னுடைய திறமைகளுக்கு இங்கு மதிப்பில்லை. எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. என்னை விட திறமை இல்லாதவர்கள் நிறைய சம்பாதிக்கின்றனர்; சந்தோஷமாய் இருக்கின்றனர். என் மனைவி, இரண்டு மகள் யாரும் என்னை மதிப்பதில்லை...''

""உன் மீது எந்த தவறும் இல்லையா?''

""இருக்கிறது...''

""அவற்றை சரி செய்கிறாயா?''

""ம்...''

""நீ இறந்துவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?''

""தெரியாது...''

""கோழை என்று பெயர் எடுப்பாய், வாழத் தெரியாதவன் என்று பெயர் எடுப்பாய், உன் குடும்பத்தினரை ஏளன மாய் பார்ப்பர். வாழ பல வழியிருக்கிறது. மரணம் ஒரு முடிவு இல்லை...''

""என்ன சொல்ல வருகிறீர்கள்?''

""நீ சாதிக்க வேண்டியது, செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நீ அவசரப்படுகிறாய், ஒரு நொடியில் கூட உன் வாழ்க்கை மாறும். உனக்கு பொறுமை இல்லை. கையால் சூரியனை தொட அவசரப்படுகிறாய்...''

""இருக்கலாம்...''

""இருக்கலாம் இல்லை; அதுதான் உண்மை. இன்னும் வேகமாய் இயங்கு, வெற்றி உன்னை தேடி வரும். உன்னுடைய குறைகளை முதலில் களைந்தெறி, மற்றவர்களிடம் குறை காண்பதை நிறுத்து. உன் திறமைகளை நினைத்துப் பார். மாறி இயங்கு, எல்லாம் சரியாகும்...''

""அப்படியா?''

""நான் கடவுள்... பொய் சொல்ல மாட்டேன். உன்னை விட பிரச்னை உள்ளவர்கள், பல்லாயிரம் பேர் பூமியில் இருக்கின்றனர். எல்லாரும் உன் முடிவை எடுத்தால் என்ன ஆகும்... வாழ்க்கை என்பது வாழத்தான். இந்த ஜென்மத் தில் நீ அனுபவிக்க வேண்டிய இன்ப, துன்பங்களை முடிக்காமல், வாழாமல் நீ செல்ல முடியாது. அதுதான் தர்மம்...''

""கர்மவினைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை...''

""உனக்கு நம்பிக்கை இருக் கிறதோ, இல்லையோ... கர்மவினை இருக்கிறது. நான் கடவுள் சொல்கிறேன்... உனக்கு நம்பிக்கை இல்லையா?''

""நீங்கள் தான் கடவுள் என்று எப்படி நம்புவது?''

""எதையும் நம்பாதது உன் பிறவி குணம். மரணத்தின் விளிம்பில் உன்னை உட்கார வைத்து, கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல், பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். பூலோகத்திற்கு திரும்பியதும், உனக்கு பரிச்சயமான மனோதத்துவ நிபுணர்களை சந்தித்து, நீ சாப்பிட்ட மாத்திரைகளின் பட்டியலைச் சொல். நீ பிழைத் தது உலகமகா அதிசயம் என் பர்.''

""நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்?''

""காலையில் விழிப்பு வரும், வேலைகளை தொடர்ந்து செய். உன் தவறுகளை சரி செய்து கொள். உன்னுடைய திறமையை முழுவதும் வெளிப் படுத்து, பணம் உன்னை தேடி வரும். பின்னால் எல்லாம் வரும். ஒரு நிமிடம் கண்ணை மூடு...''

மூடினேன்; விழித்தேன்.


காலையில் மணி மூன்றரை—

என் மொபைல் போனில், என் நண்பர்களுக்கு அனுப்பிய கடைசி செய்தியைப் படித்தேன்.

எனக்கே சிரிப்பு வந்தது.

கடவுளை சந்தித்து திரும்பினேன் என்று சொன்னால் யாராவது நம்புவரா; சிரிப்பர்.

சிரித்துவிட்டு போகட்டும்.

காலிங்பெல் சப்தம்; திறந் தேன்.

டை கட்டிய இரண்டு பேர் நின்றிருந்தனர்.

""வங்கியிலிருந்து வருகிறோம்...''

""எந்த வங்கி?''

கூறினர்.

""ஆறு தவணை நீங்கள் கட்டவில்லை...''

""வியாபாரத்தில் நஷ்டம், என்னால் கட்ட முடியவில்லை. இன்னும் மூன்று மாதத்தில் சரியாகி விடும்...''

""நீங்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்து கடிதம் எழுதி கொடுங்கள்...''

முகவரியை கொடுத்துச் சென்றனர்.

திரும்பினேன்; பக்கத்தில் யாரோ நிற்பது போல் இருந் தது.

கடவுளா...?

இல்லை!

நம்பிக்கை!

Thanks to Dinamalar Varamalar Innaippu



நேற்றும் நடந்தது

சுப்ரஜா

கருக்கல் இன்னமும் கலையவில்லை. குளித்தது போதும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது. கலைச்செல்வி மறுபடியும் தண்ணீரில் மூழ்கி எழுந்தாள். விடியலுக்கு முன் காவிரித்தண்ணீரில் உடல் நனைப்பது ஒரு இதம். அந்த இதம் கலைச்செல்விக்கு சுகமாய் மனசையும் வருடியது.

படியிறங்கி தண்ணீர் படியில் முதலில் கால் வைக்கும்போது ஜில்லிப்பு உடல் தாண்டும். எலும்பை லொட லொடக்க வைக்கும். உடைகள் குறைத்து மார்பு வரை பா¬வாடையை இழுத்து இறுக்க கட்டிக்கொண்டு ஒரு முறை கழுத்துவரை தண்ணீரில் சற்றே நின்று பரக்கென்று மூழ்கி எழுந்தாள். உடல் முழுக்க ஒரு சுகம் பரவும். படித்துறையில் நின்று தலை துடைத்தவள் எலுமிச்சங்கா பாளைய பாலம் பார்த்தாள். துவரங்குறிச்சி மோர்க்காரி கூடையுடன் கிளம்பி விட்டாள். விடியலுக்கு முன்னே புறப்படும் உதயம்!

புடவையை உடல் முழுக்க சுற்றிக் கொண்டவள் படியில் பிழிந்து வைத்திருந்த துணிகளை எடுத்து வாளியில் அடைத்துக்கொண்டாள். சோப்பு பெட்டியை மேல் வைத்து பிடி பற்றி கிளம்பினாள். ஆற்றுத் தெரு தாண்டி கீழ் தெருவில் நுழைந்தாள். டீக்கடையில் பாய்லரை ரெடி பண்ணிக்கொண்டிருந்த அசோகன் அங்கிருந்தே அவள் மேல் பார்வையை அலைய விட்டு சிரித்தான். அலட்சித்தவள் வெளிப்புறம் பூட்டியிருந்த பூட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

அப்பாவின் அறைக்குள் எட்டிப்பார்த்தாள். இன்னமும் எழுந்திருக்கவில்லை. காலை வேலைகளை ஆரம்பித்தாள். அவளையும் அறியாமல் மனம் அவளை தாராசுரம் பற்றியிழுத்தது. இன்று வியாழக்கிழமை. பள்ளித்தோழி வனஜா திருவாடுதுறை பெரியப்பா வீட்டிற்கு போயிருப்பாள். ரமேஷ் தனியாய்தான் இருப்பான். காதுகள் குறுகுறுக்க மார்பு கூட்டோடு விம்மித்தணிந்து வசப்படுதல் இயற்கை. முதல்முறை அவனைப் பார்த்த போதே வசப்படும் ரசாயன மாற்றம் நிகழ்ந்துதான் விட்டது.

கலை, இதுதான் என் அண்ணா ரமேஷ்! ஹலோ... என்றாள் சம்பிரதாயத்திற்கு.

நைஸ் மீட்டிங் யூ- என்றான் அழுத்தம் திருத்தமாய். அவனின் தொனியே வேறுமாதிரியிருந்தது. அவன் வேறு அறைக்குள் புகுந்து கொண்ட பின்னும் அங்கேயே நிலைகுத்தியிருந்தாள். நெடு நெடுவென்றிருந்த அவனின் உயரமே அவள் மனதில் கனப்பொழுதில் படிமமாக-

என்னம்மா... கலைச்செல்வி. காபி ரெடியா? - அப்பா வேலாயுதம் கேட்டுக் கொண்டே பல்விளக்க போனார். பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக இருந்து போட்டோடையர் ஆனவர். சிறு வயதில் அக்ரஹார தெருவில் குடியிருந்த தன் தாய்
வழிப்பாட்டி வீட்டில் வளர்ந்தவர். தெரு வாசனையோ என்னவோ... அவருக்கு காபி பழக்கம் தொற்றிக் கொண்டது.

இந்தாங்க -வந்து நின்றவரிடம் காபியை நீட்டினாலும் மனம் முழுக்க ரமேஷ் கடலலையாய். பெண்ணே... தன் வயப்படலை சொல்லலாமா... தவறா... ம்ஹ§ம். தவறென்று யார் சொன்னது? சொல்ல முன்னுரிமையில்லையா? தான் எப்போதோ அவனை காதலிக்க ஆரம்பித்துவிட்டதை மனம் மறுக்கவில்லை. நெஞ்ச குறுகுறுப்பு நீடிக்க-

அப்பா...

ம்...

வீட்ல தனியா இருந்து ரொம்ப போரடிக்குது. தாராசுரத்தில என் பிரண்டு ஒருத்தி இருக்காளே... அவ வீட்டுக்கு போய்ட்டு வரலாம்னு பார்க்கறேன்.

யாரு.. வனஜாவா?

ஆமாம்பா...

எப்ப போகப் போறே?

பதினொரு மணிக்கு... நாலு மணிக்கு திரும்பிடுவேன்.

பத்திரமா போய்ட்டு வாம்மா...

சரிப்பா...

லேடீஸ் சைக்கிளை மிதித்து தாராசுரத்திற்குள் நுழைந்தவளுக்கு நெஞ்சம் படபடத்தது. மார் கூட்டுக்குள் ஓயாத சிட்டுக்குருவி இம்சை! ராதாரவி குரலில் எவனோ சினிமா வசனத்தை கத்திக்கொண்டு போக, குதிரை வண்டியிலிருந்து நோட்டீஸ் கற்றையாய் வெளிவந்து காற்றில் உதிர்ந்து பிரிந்து பறந்தது. சின்ன பையன்கள் காற்றில் மடிந்து மடிந்து இறங்கிய நோட்டீசுக்கு போட்டி போட- பொஸ்ஸா பொல்டி என கறிக்காரன் சைக்கிள் மணியடித்து கடந்தான்.

அப்பாவிடம் வனஜாவை பார்க்க என்று பொய் சொல்லி வந்தாலும் பாழாய்போன மனசு இப்படி கிடந்து அடித்துக் கொள்கிறதே...? வெயில் சற்று கடுமையாய் இருந்தது. விடாமல் சைக்கிள் மிதித்து வந்ததில் வியற்வை வேறு கசகசவென்று. ஜாக்கெட்டும் நனைந்து விட்டிருந்தது. திவலையாய் நீர் காதோரம் முடிக்கற்றை பற்றி இறங்கியது. வனஜாவின் வீடு நெருங்க நெருங்க குடை ராட்டின குழந்தை போல் ஆனாள் கலைச்செல்வி. வீடு வர- சைக்கிளை ஓரமாய் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள். கதவை தட்ட-

யாரு... - என்று உள் குரல்.

ஒன்றும் பதில் சொல்ல தோன்றாமல் நின்றாள். ரமேஷின் குரல்தான். ஒன்றும் சொல்ல தோன்றாமல் நின்றாலும் ஏதாவது பேசேன் என்று உள் மனசு சற்று உரக்கவே கட்டளையிட- நான்தான் என்றாள் அவளுக்கே போட்டோதான மெல்லிய குரலில். அந்த குரல் காற்றில் மந்திரத் துகளாய் விரவி உள் போயிருக்க வேண்டும். தட தடவென்று தரை அதிர ஓடி வந்தான் ரமேஷ். அவனும் கள்ளன்! திறந்தவுடன்-

வனஜா இல்லையே... -என்றான். இமை படபடத்தாள் கலைச்செல்வி.

வனஜா இப்ப இல்லைன்னா திரும்பியே வரமாட்டாளா என்ன... நான் உள்ள வரக்கூடாதா? அவ திரும்பற

வரைக்கும் இப்படி வெயிலில் காயணுமா..?

அதிரடியாய் கலைச்செல்வி அடுக்கிக்கொண்டே போக ரமேஷ் லேசாய் தடுமாறினான். அவனின் படபடத்தலையும் தடுமாற்றத்தையும் ரசித்தாள். கதவைத்திறந்து விட்டான்.

உள்ளே வாங்க....

சுவாதீனமாய் உள்ளே நுழைந்தவள் வனஜாவின் அறைக்கு போனாள். நாற்காலியை நடு அறைக்கு தள்ளிபோட்டு உட்கார்ந்தாள். வாசல் கதவை உள்புறம் தாளிடும் ஓசை. அறை வாசலில் ரமேஷ் வந்து நிற்பதை ஜாடையாய் கவனித்தாள்.

எப்ப வருவா வனஜா?

கலைச்செல்வி... அடுத்த வாரம் வியாழக்கிழமை பெரியப்பா வீட்டிற்கு போக போகிறேன். நைட்தான் திரும்புவேன். -வனஜா அப்போது சொன்னது மனதுள் மோதியது. அவள் பார்க்க வந்தது உண்மையிலேயே வனஜாவையா என்ன?
எப்ப வருவா வனஜா? - மறுபடியும் கேட்டாள். தெரியலையே... - என்றான். பொய்யோ..? சினிமாவில் மட்டும் எவ்வளவு எளிதாக காதலை சொல்கிறார்கள். சொல்.... என்று மனசு சொன்னாலும் ஏதோ எங்கோ பிடித்திழுத்தது.

வேண்டுமென்றே சீண்டினாள்...

ஏன் அங்கேயே நிக்கறீங்க.. உங்க வீடுதானே..?

வீடு எங்களுதா இருந்தாலும் உள் அறையில இருக்கிறது..... ரமேஷ் இழுத்தான்.

என்ன ரமேஷ்... பேங்க் போஸ்டிங் என்னாச்சு... -பேச்சு வழுக்கி தடம் மாறியது. இன்னும் லெட்டர் வரலை...-அங்கிருந்தபடியே பதில் சொன்னான்.

என்ன ரமேஷ். இன்னும் என்ன? இது ஸ்டார் டி.வி யுகம்.... அறை வாசலில்தான் நிக்க போறீங்களா?

ஓ... எல்லாம் டைம் ஸ்டைல் வேகம் தானா? -இது ரமேஷ்! அவன் சொன்னது காம்ளிமெண்டா,

கிண்டலா?

வெளயாட்டு போதும் ரமேஷ். உள்ள வா, இப்படி கட்டிலில் உட்கார். உங்கிட்ட தனியா பேசணும்னுதான் மாங்கு மாங்குன்னு சைக்கிளை மிதிச்சுண்டு வந்திருக்கேன்.

பேச மட்டும்தானா...?

உள்ளே வந்த ரமேஷ் கட்டிலருகே நின்று கேட்க தலைகுனிந்தாள். அவன் கேட்ட கேள்வி,

சொல்லிவிடு.... என்று உள்ளுக்குள் அரற்றிய கலைச்செல்வியின் குரல்வளையை பிடித்தாற் போல் ஆனது. விருட்டென எழுந்தாள். ரமேஷ் கட்டிலில் உட்காராமல் அவளருகே வந்து நின்றான். மிக அருகில் அவன் வந்து நின்றதும் வெடவெடத்தது அவளுக்கு.

முகத்தில் மெல்லிய புன்னகை கீற்றுடன் பேசத்தானா? என்று மறுபடியும் கேட்டான். அவன் சாதாரணமாய்ச் சொன்னாலும் சுரீரென்று எங்கேயோ வலித்தது கலைச்செல்விக்கு. உள்ளுக்குள் சலனமில்லாமல் நேசித்தாலும் வெறும் வெப்ப நட்பு என கிறுக்கன் நினைத்துக் கொண்டானே என்ற ஆதங்கம் அரக்கியாய் உள்ளே எழ - மனசு வெடித்து, இமையோரம் நீர் சேர்ந்தது.

என்ன? என்றான் வெப்பமாய்.

ஒண்ணுமில்லை

நாற்காலி நகர்த்தி கிளம்பினாள்

வனஜா வந்தா வந்திட்டு போனேன்னு சொல்லுங்க வேகமாய் வெளி வந்தவள் கழுத்தோரம் வியர்வையை இழுத்து சுண்டினாள். சைக்கிளை கிளப்பி வேர்க்க விறுவிறுக்க மிதித்து முன்னேறினாள். ஒரு வெறுமை மனம் எங்கும் முட்டியது. மீன் குளத்தில் தபார், தபாரென சிகடா பையன்கள் குதித்துக் கொண்டிருக்க, நீர் வளையம் வளையமாய் விரிந்து குளக்கரையில் முட்டி மறைந்தது.

இடுகையிட்டது SHOCK நேரம் 3:51 AM

Wednesday, September 16, 2009

ethirparathathu

விவேக் மீது போலீசில் புகார்!

கே.கே. நகரில் விவேக்குக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் எழுத்தாளர் சுப்ரஜா 2005-முதல் குடியிருந்து வருகிறார். சுப்ரஜாவின் மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை வீட்டை காலி செய்ய வேண்டாம் என்று விவேக் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விவேக் தரப்பிலிருந்து வீட்டை காலி செய்ய சுப்ரஜாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், வாடகைப் பணத்தை வாங்க மறுத்ததாகவும் போலீஸில் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், விவேக் சிலருடன் சுப்ரஜாவின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை உடைத்து, வீட்டை காலி செய்ய மிரட்டி விட்டுச் சென்றதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுப்ரஜா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விவேக் வீட்டில் 2005ம் ஆண்டு முதல் ரூ.7 ஆயிரத்துக்கு வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் என்னிடம் வாடகை வாங்கப்படவில்லை. இந்நிலையில் விவேக்கின் உதவியாளர் வீட்டைக் காலி செய்யும்படி மிரட்டினார். அவரும் தொலைபேசியில் மிரட்டினார். எனது வாடகையை மணி ஆர்டர் மூலம் அனுப்பினேன். அது திரும்பி வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது. இப்புகாரின்படி கே.கே.நகர் போலீசார் விவேக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக விவேக் கூறியதாவது கே.கே.நரில் உள்ள வீட்டுக்கு எனது சகோதரி வர உள்ளார். அப்பகுதியிலே அவரின் மகனை படிக்கவைப்பதே வசதியாக இருக்கும் என்றதால் 3 மாதத்துக்கு முன்பே சுப்ராஜாவிடம் வீட்டைக் காலி செய்யும்படி கூறியிருந்தேன். 3 வருடமாக அந்த வீட்டுக்கு நான் போகவில்லை. அவர் கொடுத்தது பொய் புகார் ஆகும் என்றார்.
1 comments:

siti and sudahmadhi said...

Its a very shocking news to us the comedy actor turned villain. We know the writer past twenty years. We met him in Singapore and Malaysia several times. He is very humble and soft spoken.we friends always discuss about cinema and books. He is very very soft spoken. This news We read through only blog. He never told us. We wonder this could happen only in India that too for a veteran journalist and writer.I lost respect for the comedian turned villain . We and friends decided to boycott his future films.
September 24, 2009 9:26 PM

Post a Comment

நல்ல புத்தகம்


வெற்றி விதைகள்


ஆசிரியர்: சுப்ரஜா வெளியீடு: வாதினி
விலை: ரூ.100 வெற்றி விதைகள் : ஆக் மாண்டினோ எழுதிய Mission Success ஆங்கில நாவல்.தமிழில்: சுப்ரஜா.

வெளியீடு:

வாதினி,
545, 14வது தெரு, 4வது செக்டார், கே.கே.நகர், சென்னை-78.வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய இந்த புதினம் சுயமுன்னேற்ற வகையைச் சார்ந்தது. தமிழில் நிறைய கதைகள் எழுதியுள்ள ஆசிரியர், மொழிபெயர்ப்பிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.