Pages

Tuesday, September 29, 2009

சாவி பெயரினை சொல்லி பிழைப்பு நடத்துவவர்கள்

முருகன் , சிவகாசி .
உண்மையிலே ஆசிரியர் சாவியால் உருவானவர்கள் யார் ?

சாவிக்காக அதிகம் உழைத்தவர்கள் அச்சு கோர்த்த ராஜபாதர் , ஓவியர் ஜெயராஜ் .அவரது சொந்த காரர்கள் மோகன் { தற்பொழுது தினமணியில் இருக்கிறார் } ராஜேந்திரன் {இப்பொழுது தினமலரில் இருக்கிறார் } இவரை போல தலைப்பு கையால் அழகாய் எழுத வேறு யாரும் இல்லை. ரிசர்வ் பேங்க் ராணிமைந்தன் , டி .எஸ்.ரமேஷ் { இப்பொழுது ஆங்கில பத்திரிகை ஒன்றில் புகைபடகரராக இருக்கிறார்.அப்புறம் சுப்ரஜா.பாரிவள்ளல்.வைத்யநாதன்.குமுதம் பத்திரிகையிலும் குங்குமம் பத்திரிகையிலும் வாரா வாரம் எழுதி வந்த என்னை பல புனை பெயர்களில் எழுத வைத்து பத்திரிக்கை பற்றி அனைத்தையும் சொல்லி தந்தவர் சாவி.இன்றுஅவரிடம் இருந்தேன் என்று யார் யாரோ சாவி பெயரினை சொல்லி பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.ஒருவரை மறந்து விட்டேன்.சம்பத் . இவர் சிறுகதைகள் நிறைய எழுதுவார் .நன்றாக ப்ரூப் பார்ப்பார்.{தற்பொழுது நக்கீரன் வாரம் இருமுறையில் இருக்கிறார்.

No comments:

Post a Comment