Pages

Monday, September 28, 2009

மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு


கந்தசாமி , மதுரை .
வடிவேல் விவேக்கின் மார்கெட்டை காலி பண்ணிட்டாரா ?

சமீபகாலமாக விவேக்கிற்கும் வடிவேலுக்கும் பனிப்போர் நடந்த வண்ணமே உள்ளது. இதுவரை சில படங்களில் விவேக் கழட்டிவிடப்பட்டு, வடிவேலுவை உள்ளே கொண்டுவந்துள்ளனர். அதே இன்னும் சிலர் வடிவேல் கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில் விவேக்-ஐ உள்ளே இழுத்துப்போட்டுள்ளனர். சமீபத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் படம் 'கந்தசாமி'. இதில் முதலில் புக் ஆனவர் விவேக். ஆனால் என்ன நடந்ததோ திடீரெனக் கழட்டி விடப்பட்டு, வடிவேலு-வை ஒப்பந்தம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வடிவேலுக்குக் கிடைத்த அடுத்த பெரிய படம் 'ஆதவன்'. இதனைத் தாயாரிப்பவர் யார் தெரியுமா? குருவி தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின். இந்தப் படத்திலும் காமெடிக்காட்சிகளுக்கு புக் ஆகி இருந்தவர் விவேக். ஆனால் இதிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.

எது எப்படியோ? சின்னக் கலைவாணர் விவேக்-குக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சதுக்கப்பறம் அவரு பக்கம் ஏனோ வெப்பக்காத்து அடிக்குது...அம்புட்டுத்தேண்ணே!

1 comment:

  1. For his nature he wont get any chances in the future. Now its a down fall for Vivek. Vadivelu is a humble man.

    ReplyDelete