Monday, October 26, 2009
பாக்தாத் : ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அரசு அலுவலகங்களுக்கருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பை, அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார்.
ஈராக்கில் கடந்த 2003ம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சி வீழ்ந்த பின், அமெரிக்க படைகளை வெளியேறக் கோரி சதாம் ஆதரவு அமைப்புகள், பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன.ஈராக்கில் தற்போது பிரதமர் நூரி அல் மாலிக் தலைமையில் ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம், தலைநகர் பாக்தாத்தில் நீதித்துறை அமைச்சக கட்டடம் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடத்தின் அருகே குண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில், இறந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது; 500 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டித்துள்ளார்.
"இது போன்ற அட்டூழியங்களால் அப்பாவிகள் பலியாவதைத் தவிர வேறு எந்த விளைவும் ஏற்பட்டு விடப்போவதில்லை. இந்த நாச வேலைகளால் ஈராக்கின் முன்னேற்றம் தடைபடும்' என்கிறார் ஒபாமா.இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய, அமெரிக்க தடயவியல் நிபுணர்கள் பாக்தாத் விரைந்துள்ளனர்.ஈராக்கில் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலை குலைப்பதற்காகத் தான் வன்முறையாளர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவதாக, ஈராக் அதிபர் ஜலால் தலபானி தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
who started all these ? Back door entry is the policy of America ? yet another president from Supremacy America . Jai Hind
ReplyDeleteYET ANOTHER PRESIDENT FROM GREAT AMERICA
ReplyDelete