Friday, October 23, 2009
இருபத்தியிரண்டு ஆயிரம் கோடி ஊழல்
"2-ஜி ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
புதிதாக தொலைத் தொடர்பு சேவை தொடங்கிய நிறுவனங்கள் சிலவற்றுக்கு அலைக்கற்றை ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 22 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.
2008-ம் ஆண்டு 8 புதிய நிறுவனங்களுக்கு செல்போன் சேவை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக 4.4 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. லைசென்ஸ் பெற்ற "யுனிடெக்' மற்றும் "ஸ்வான் டெலிகாம்' நிறுவனங்கள் சேவையைத் தொடங்கும் முன்பாகவே அதிக விலைக்கு வேறு நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்தன. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிறுவனம் லைசென்ஸ் பெறுவதற்கு செலுத்திய கட்டணத்தை விட பல மடங்கு அதிக விலைக்கு பங்குகளை விற்பனை செய்தன.
சந்தை மதிப்பைவிட மிகக் குறைந்த விலையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு வாரியம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது. இதையடுத்து மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) அதிகாரிகள் தில்லியில் உள்ள சஞ்சார் பவன் அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
வயர்லெஸ் திட்ட பிரிவுதான் (டபிள்யூபிசி) உரிமங்களை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே முதலில் இப்பிரிவில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் சேவைப்பிரிவின் துணை இயக்குநர் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, 1994-ம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலின்படிதான் உரிமங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஜனவரி 2008-ம் ஆண்டிலிருந்து புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது.
இருபதியிரண்டயிரம் கோடிக்கு எத்தனை சைபர் நைனா ?
- நக்கல் நாகராசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment